கிளைமாக்ஸ் சொதப்பியதால் பிளாப் ஆன 5 படங்கள்.. ஒரே சீனில் மொத்தமாய் மண்ணை கவ்விய நந்தா

Actor Surya: நாம் பார்க்கும் ஒரு சில படங்கள் அடுத்து என்ன, என்ன என்ற ஆர்வத்தோடு நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைத்துவிடும். ஒரு படத்தின் வெற்றிக்கு திரைக்கதை என்பது ரொம்ப முக்கியம். கதை கொஞ்சம் காட்சிக்கு காட்சி இழுவையாக அமைந்துவிட்டால் படம் பார்க்கும் சுவாரசியமே இல்லாமல் போய்விடும். ஒரு சில படங்களின் கதைகள் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்து போய்விடும், ஆனாலும் இயக்குனர்கள் படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் கிளைமாக்ஸ்ஸை பங்கமாக சொதப்பி வைத்திருப்பார்கள். இந்த ஐந்து படங்கள் கிளைமாக்ஸ் திருப்தி இல்லாததால் பிளாப்பாகி இருக்கின்றன.

குருதிப்புனல்: உலக நாயகன் கமலஹாசனுக்கு மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த திரைப்படம் குருதிப்புனல். இந்த படம் ஆஸ்கார் விருது வரை பரிந்துரைக்கப்பட்டது. அந்த காலத்தில் பாடல்களே இல்லாமல் வெளியான திரைப்படம் இது. படத்தின் கிளைமாக்ஸ் கமல்ஹாசன் தீவிரவாதிகளிடம் தன்னைச் சார்ந்தவர்களை காட்டிக் கொடுக்காமல் இருக்க தன்னை சுட சொல்லுவார். அதே போல் காவல் அதிகாரிகளும் கமலை சுட்டுவிடுவார்கள். இந்த கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு திருப்தியை கொடுக்கவில்லை.

Also Read:வித்தியாசமான கெட்டப்பில் களமிறங்கும் சூர்யா.. ரோலக்ஸ் பின் ஜெட் வேகத்தில் பறக்கும் கங்குவா

பிரியமுடன்: தளபதி விஜய் முதன் முதலில் நெகட்டிவ் ரோலில் நடித்த திரைப்படம் பிரியமுடன். தன் காதலுக்காக எதையும் செய்யக்கூடிய மூர்க்க குணம் கொண்ட வசந்த் என்னும் கேரக்டரில் விஜய் நடித்திருப்பார். காதலுக்காக அவர் செய்த குற்றங்கள் கதாநாயகி கௌசல்யாவிற்கு தெரிய வந்து அவரை ஏற்றுக் கொள்ளும் வேளையில் போலீசாரால் வசந்த் சுட்டுக் கொல்லப்படுவது போல் படத்தின் கிளைமாக்ஸ் இருக்கும். இதனாலேயே இந்த படம் பிளாப் ஆனது.

மூன்று: தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய திரைப்படம் 3. இந்த படம் 90ஸ் மற்றும் 2கே கிட்ஸ்களால் இன்று வரை கொண்டாடப்படுகிறது. பள்ளி பருவ காதலில் ஆரம்பித்து திருமணம் வரை செல்லும் அழகிய இந்த கதையில், சைக்காலஜிக்கல் ட்விஸ்ட் மற்றும் தனுஷின் மரணம் என மொத்தமாக சொதப்பி இருப்பார் இயக்குனர் ஐஸ்வர்யா.

Also Read:மாஸ்டர் படத்திலிருந்து விஜய்க்கு வந்த புதுப்பழக்கம் .. மன்சூர் அலிகான் கூட இருந்தால் கேட்கவா வேணும்

பீமா: சீயான் விக்ரம், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் பீமா. இந்த படம் சாமி படத்திற்கு பிறகு விக்ரம் நடித்த அதிரடி ஆக்சன் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் கிளைமாக்ஸ் சீனில் விக்ரம், பிரகாஷ்ராஜ், த்ரிஷா என முக்கியமான கேரக்டர்கள் எல்லோரும் சுட்டுக் கொல்லப்படுவது போல் காட்டப்பட்டு இருக்கும். இந்த கிளைமாக்ஸ் ரசிகர்களிடம் எடுபடவில்லை.

நந்தா: நடிகர் சூர்யாவிற்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்பத்தை கொடுத்த திரைப்படம் நந்தா. விக்ரமுக்கு எப்படி சேது திரைப்படமோ அதேபோன்று சூர்யாவுக்கு இயக்குனர் பாலா கொடுத்தது தான் நந்தா. இந்த படத்தின் கிளைமாக்சில் நடிகர் சூர்யா அவருடைய அம்மாவின் கையாலேயே விஷம் கொடுத்து கொல்லப்படுவது போல் காட்டப்பட்டிருக்கும். சேது போன்று சூப்பர் ஹிட் அடித்து இருக்க வேண்டிய இந்த படம் இந்த கிளைமாக்ஸ் சீனால் மட்டுமே மொத்தமாக மண்ணைக் கவ்வியது.

Also Read:லியோ ஃப்ளாஷ் பேக் காட்சியில் ஏற்பட்ட ட்விஸ்ட்.. புது என்ட்ரி கொடுக்கும் பிரேமம் நடிகையின் போட்டோ

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்