ஹீரோவிற்கு நிகராக கவனிக்கப்பட்ட 5 கதாபாத்திரங்கள்.. தியேட்டரில் அனைவரையும் மிரளவிட்ட ‘ஏஜெண்ட் டீனா’

தமிழ் சினிமாக்களை பொறுத்த வரைக்கும் எப்பொழுதுமே ஒரு படத்தில் நடிக்கும் ஹீரோக்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த ஹீரோவை மையப்படுத்தி தான் மற்ற கேரக்டர்கள் இருக்கும். ஆனால் ஒரு சில படங்களில் மட்டுமே ஹீரோவை மறக்கடிக்கும் அளவுக்கு சில கேரக்டர்கள் அமைந்திருக்கும். அப்படி தமிழ் சினிமாவில் இந்த ஐந்து கேரக்டர்கள் ஹீரோவுக்கு நிகராக வெயிட்டான கதாபாத்திரத்துடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்: ஒளிப்பதிவாளர் பிரேம்குமாரின் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். இந்த படம் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதில் ஹீரோ உடனே பயணிக்கும் பக்தவச்சலம் என்னும் பக்ஸ் கேரக்டர் ரசிகர்களால் அதிக கவனத்தை ஈர்த்தது.

Also Read:ஆபரேஷன் செய்து இரும்பு பிளேட்டோடு சுற்றும் 5 ஹீரோக்கள்.. உலோக நாயகனாக மாறிய உலக நாயகன்

மெட்ராஸ்: இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் மெட்ராஸ். இந்த படத்தில் கார்த்தி உடன் கலையரசனும் இணைந்து நடித்திருப்பார். உண்மையில் படத்தில் யார் ஹீரோ என்று ரசிகர்கள் குழம்பி போகும் அளவுக்கு கார்த்தி மற்றும் கலையரசன் இருவருக்குமே சமமான ரோல் கொடுத்திருப்பார் இயக்குனர்.

காஞ்சனா: நடிகர் மற்றும் இயக்குனர் லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காஞ்சனா. இந்த படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் சரத்குமார் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதிரடி, ஆக்சன் ஹீரோவாக அதுவரைக்கும் ரசிகர்களுக்கு தெரிந்த சரத், முதன் முதலில் திருநங்கை கேரக்டரில் நடித்திருந்தது ரசிகர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது.

Also Read:பல கோடிகளில் சம்பளம் வாங்கும் 5 இயக்குனர்கள்.. லோகேஷை மிஞ்சிய விஜய்யின் செல்ல தம்பி

கைதி 2: கைதி என்னும் ஒரு வித்தியாசமான கதைகளத்தால் தமிழ் சினிமாவை மற்றொரு கட்டத்திற்கு நகர்த்தியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதில் நெப்போலியன் கேரக்டரில் வரும் ஜார்ஜ் மரியான் பல வருடங்களாக சினிமாவில் இருந்தும் இந்த படத்தில் தான் அவருக்கான சரியான அங்கீகாரம் கிடைத்தது. கைதி இரண்டாம் பாகத்திலும் இவர் முக்கியமான ரோலில் நடிக்கிறார்.

விக்ரம்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவர் இயக்கும் படங்களில் எந்த ஒரு கேரக்டரையும் ஏனோ தானோ என்று வைத்து விட மாட்டார். அவர் படங்களில் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கும். விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி என ஒரு பக்கம் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் வேளையில் அசால்டாக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி இருப்பார் ஏஜென்ட் டீனா.

Also Read:கமல் அடிச்ச அப்பாயின்மென்ட் ஆர்டர்.. 3 இயக்குனர்களை டீலில் விட்ட சிவகார்த்திகேயன்

- Advertisement -