சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

எவ்வளவு அடி வாங்கினாலும் தொடர்ந்து நடிக்கும் 5 ஹீரோக்கள்.. விஷாலுக்கு பயத்தை காட்டிய எஸ் ஜே சூர்யா

Tamil heroes: சினிமாவில் எவ்வளவுதான் அசிங்கப்பட்டாலும், அவமானப்பட்டாலும் திரும்ப வந்துட்டேன்னு சொல்லுன்ற மாதிரி, என்ன ஆனாலும் தொடச்சி போட்டுட்டு தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள் சில ஹீரோக்கள். ரசிகர்கள் துளி கூட கண்டு கொள்ளாத போதும் மீண்டும் மீண்டும் படங்களில் நடித்து வரும் 5 ஹீரோக்கள் யார் என்று பார்க்கலாம்.

சித்தார்த்: பாய்ஸ் படத்துலயே பயங்கரமாக ரீச் கொடுத்தவர் தான் சித்தார்த். ஆனால் அதற்குப் பிறகு சினிமாவில் நடித்து ஃபேமஸ் ஆவதை விட சர்ச்சைகளில் சிக்கி பயங்கர பேமஸ் ஆகி சோசியல் மீடியாக்களில் வலம் வந்தவர். உதயம் NH4, காவிய தலைவன், எனக்குள் ஒருவன் போன்ற திரைப்படங்களில் பயங்கர அடி வாங்கினார். எவ்வளவுதான் கீழே விழுந்தாலும், மறுபடியும் நடித்து கொண்டு இருக்கிறார்.

Also Read:தீபிகாவை வைத்து நயன்தாராவை டம்மி பீஸ் ஆக்கிய அட்லி.. செம காண்டில் இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார்

விக்ரம் பிரபு: சிவாஜி கணேசன் பேரன் என்பதற்காகவே இவர் ஆரம்பத்தில் பயங்கரம் ஆக பேசும் பொருளானார். இவரின் தாத்தா, அப்பாவை போன்று நடிப்பில் இவரிடமும் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. ஆனால் அது எதுவுமே இவரால் ஈடு கட்ட முடியவில்லை. இவர் பயங்கர மொக்கை வாங்கிய திரைப்படங்கள் பக்கா, சத்ரியன், வாஹா போன்றவை ஆகும். இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்.

விஷால்: ஆரம்பம் நல்லாதான் இருக்கு, ஆனா பினிஷிங் சரியில்லை என்பது மாதிரி விஷால் மேலே கீழே என சடுகுடு ஆடிக் கொண்டு வருகிறார். இவருக்கு பயங்கர அடி வாங்கிய திரைப்படங்கள் சண்டக்கோழி 2, அயோக்கியா, ஆக்சன், எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி என சொல்லனும்னா லிஸ்ட் பெருசா போயிட்டே இருக்கும். எவ்வளவு தான் அடி வாங்குனாலும், அசராம திரும்ப வருவார் போல. மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கூட, எஸ் ஜே சூர்யா இவரை ஓவர் டேக் செய்து விட்டார்.

Also Read:விராட் கோலி உடம்பில் உள்ள 5 டாட்டூக்களும், அர்த்தங்களும்.. ஏக்கத்துடன் உயிரை விட்ட தந்தைக்கு கிங் கொடுத்த இடம்

அதர்வா: வாரிசு நடிகர்களில் ஒருவரான அதர்வாவிடமும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி பெரிதக பேசும் அளவிற்கு எந்த திரைப்படமும் அமையவில்லை. தொடர்ந்து தோல்வி பெறுவதனால் வாய்ப்புகளும் இவருக்கு சரியாக கிடைப்பதில்லை. அப்படி கிடைத்த ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், செம போதை ஆகாதே, 100 போன்ற திரைப்படங்களும் தோல்வியே முடிந்தது.

கௌதம் கார்த்திக்: கௌதம் கார்த்தியும் வாரிசு நடிகர்களில் ஒருவர் ஆவார். என்னதான் இது வரை 16 படங்கள் நடித்திருந்தாலும்,எதிலும் தனக்கென ஒரு பெயரை வாங்கும் அளவிற்கு நடிக்கவில்லை. மனம் தளராமல் தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்கள் என்னமோ ஏதோ , ஆனந்த தொல்லை, சண்டி வீரன் என சொல்லிட்டே போகலாம். எதுவுமே ஹிட்டும் அகல, பெரிய அளவு பேசவும் படவில்லை.

Also Read:ரொம்ப ஆசைப்பட்டு அஜித் ரீமேக் செய்ய சொன்ன படம்.. இயக்குனரால் கிடைத்த ஏமாற்றம்

- Advertisement -

Trending News