சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சூப்பர் ஸ்டார் உடன் கிசுகிசுக்கப்பட்ட 5 நடிகைகள்.. செட் ஆகாமல் கடைசியில் ரஜினி எடுத்த முடிவு

80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகிகளாக இருந்த நடிகைகளுக்கு பேவரைட் ஹீரோ என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இன்றுவரை பொது நிகழ்ச்சிகளில் பழைய கால நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் போது ரஜினிகாந்திடம் இந்த ஹீரோயின்கள் ரொம்பவும் உரிமையாகவும் மற்றும் பாசத்துடனும் பேசுவார்கள். இதில் ஒரு சில கதாநாயகிகள் அன்றைய காலகட்டத்தில் ரஜினியுடன் கிசுகிசுக்கப்பட்டும் இருக்கிறார்கள்.

ரஜினி – ஸ்ரீப்ரியா: ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா நிறைய வெற்றி படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பில்லா திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அந்த சமயத்தில் ரஜினியும் ஸ்ரீப்ரியா காதலிப்பதாக கூட வதந்திகள் வந்தன. பில்லா படப்பிடிப்பின் போது ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரத்தில் ஸ்ரீப்ரியா நட்பு ரீதியாக அவரை மருத்துவமனையில் வைத்து பார்த்துக் கொண்டார். அதனால் இந்த கிசு கிசு இருந்தது.

Also Read:அந்த காலத்திலேயே சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போட்ட நடிகர்.. நிலைத்து நின்ற ரஜினிகாந்த்

ரஜினி – சில்க் ஸ்மிதா: ரஜினிகாந்த் மற்றும் சில்க் ஸ்மிதா இருவருமே புகழின் உச்சியில் இருந்த போது தங்க மகன், பாயும் புலி, சிவப்பு சூரியன் போன்ற படங்களில் ஒன்றாக நடித்தனர். அப்போது இருவருக்குள்ளும் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இவர்களுடைய காதலை பிரித்தது இயக்குனர் கே. பாலச்சந்தர் தான் என கூட செய்திகள் வெளியாகின.

ரஜினி – அமலா: நடிகை அமலா சினிமாவில் அறிமுகமான புதிதிலேயே கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் உடன் அடுத்தடுத்து படங்கள் நடித்தார். அப்போது ரஜினிக்கு திருமணமாகி இருந்தாலும் அவர் அமலாவுடன் நெருங்கி பழகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூட சில மாதங்கள் இதனால் பிரிந்திருந்ததாக இன்றுவரை சொல்லப்படுகிறது. அதன் பின்னர் அமலா, தெலுங்கு சினிமாவிற்கு சென்று நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Also Read:முதன் முதலில் சூப்பர் ஸ்டார் டைட்டில் போடப்பட்ட படம்.. ரஜினியை எப்போதும் சுற்றி வரும் பாம்பு செண்டிமெண்ட்

ரஜினி – ராதா: நடிகை ராதா, சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ராஜாதி ராஜா, பாயும் புலி, எங்கேயோ கேட்ட குரல், நான் மகான் அல்ல போன்ற வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்தார். இதனாலேயே இவர்கள் இருவருக்குள்ளும் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் ராதா கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

ரஜினி- ஸ்ரீதேவி: நடிகை ஸ்ரீதேவி இந்திய சினிமாவின் பேரழகி. தமிழ் சினிமாவில் கமல் மற்றும் ரஜினிகாந்த்திற்கு அதிர்ஷ்ட நாயகி என்று கூட இவரை சொல்லலாம். இவரை காதலிப்பதற்கு இவர்கள் இருவருக்குள்ளும் போட்டி நடந்தது என்று கூட சொல்வார்கள். ஆனால் ஸ்ரீதேவி தமிழ் சினிமாவை விட்டு விலகி பாலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற ஹீரோயினாக மாறிவிட்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அன்றைய காலகட்டத்தில் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டாலும், தனக்கான வாழ்க்கையை அவராகவே தேர்வு செய்து லதாவை திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய மனைவியை பற்றி பல மேடைகளில் ரொம்பவும் பெருமையாகவும் பேசி வருகிறார்.

Also Read:ரஜினிக்கு ஜோடியாக நடித்ததால் சினிமா கேரியரை தொலைத்தேன்.. நடிகையின் பரிதாப நிலைமை

 

- Advertisement -

Trending News