விஜய்யை வளர்த்துவிட்ட சூப்பர் குட் ஃபிலிம்ஸ் 5 படங்கள்.. இளைய தளபதியை தூக்கி நிறுத்திய பூவே உனக்காக

5 Super Good Films That Raised Actor Vijay: சினிமாவில் கலைஞர்கள் தங்கள் படைப்பை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க பாலமாக, பக்க பலமாக இருப்பது தயாரிப்பு நிறுவனங்கள். இன்றைய நடைமுறையில் தயாரிப்பு நிறுவனங்களின் பிரம்மாண்ட பட்ஜெட் பிளஸ் முன்னணி நடிகர்கள் என்றாலே படம் ஹிட் ஆகி விடுகிறது. அதை தகர்த்தெறிந்து சிறப்பான திரைக்கதையை கொண்டு விஜய்யை  முன்னணி நடிகராக ஆக்கிய சூப்பர் ஹிட் பிலிம்ஸின் 5 படங்களை காணலாம்.

துள்ளாத மனமும் துள்ளும்: அறிமுக இயக்குனரான எழிலின் இயக்கத்தில் விஜய்யின் எவர்கிரீன் மூவியாக துள்ளாத மனமும் துள்ளும் அமைந்தது. மோதலும், காதலும் ஆக அமைந்த வலுவான திரைக்கதையில் விஜய்  சிம்ரனின் நடிப்பு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

திருப்பாச்சி:  பேரரசு இயக்கத்தில் விஜய், திரிஷா, மல்லிகா நடித்த திரைப்படம் திருப்பாச்சி. 2005 ஆண்டு வெளிவந்த இப்படத்தின் வசூல்  விஜய்யின் கில்லியை வசூலை முறியடித்து சாதனை புரிந்தது. விஜய் தன் தங்கை மீது கொண்ட பாசத்திற்காக  அவள் வாழும் ஊரில் உள்ள ரவுடிசத்தை அழித்து பாசத்தில் இமயமாக உயர்ந்து இருந்தார் விஜய்.

Also read: விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பிரச்சனைல மாட்டிவிடும் 5 விஷயங்கள்.. இதுக்கு சரின்னா அடுத்த முதல்வர் விஜய் தான்

பூவே உனக்காக: சூப்பர் குட் பிலிம்ஸின் தயாரிப்பில் விக்ரமன் இயக்கத்தில் 1996 விஜய், அஞ்சு அரவிந்த், சங்கீதா, நாகேஷ், நம்பியார் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்த திரைப்படம் பூவே உனக்காக.

காதலித்த பெண்ணின் காதல் கை கூடுவதற்கு இரு குடும்பங்களை சேர்த்து வைத்து தனித்து நின்ற விஜய்யை பரிதாபத்துடன் பார்த்தவர்களுக்கு “இது உங்களுக்கு வேணா சோகமா இருக்கலாம், இந்த சோகம் கூட சுகம் தான்” என்று ஸ்கோர் செய்து தனது சினிமா கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தார் விஜய். இந்த படத்திற்குப் பின் தான் குடும்பங்கள் கொண்டாடும் நடிகராக விஜய் புகழின் உச்சிக்கு சென்றார்.

ஷாஜகான்: 2001 ஆண்டு ரவியின் இயக்கத்தில் விஜய் மற்றும் ரிச்சா பலோட் நடித்த ஷாஜகான் திரைப்படத்தில், விஜய் தன் காதல் கை கூடவில்லை என்றாலும் தன்னை நம்பி வரும் காதலர்களை சேர்த்து வைக்கும் கடமையை திறம்பட செய்து முடித்து இருந்தார்.

ஜில்லா:  நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சூப்பர் குட் பிலிம்ஸின் ஜில்லா. 2014 வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து விஜய்க்கும் தங்களுக்கும் இருக்கும் பிணைப்பை பற்றி மனம் திறந்த சூப்பர் குட் பிலிம்ஸ்  தங்களது நூறாவது படத்தில் விஜய்யை நடிக்க வைக்க திட்டமிட்டு வருகிறார்கள்.

Also read: 2026 சட்டமன்ற தேர்தல் விஜய்யை மைய்யமாக வைத்து தான்.. தளபதியின் வியூகத்தை வெளி கொண்டு வந்த செய்தி தொடர்பாளர்

- Advertisement -spot_img

Trending News