வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கேரக்டர் ரோலிலும் கலக்கிய சத்யராஜின் 5 படங்கள்.. கோமணத்தோடு அந்தர் பண்ணிய ஒன்பது ரூபாய் நோட்டு

ஆரம்பகால கட்டத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சத்யராஜ் ஹீரோவாக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். தற்போது குணச்சித்திர வேடங்களை தேர்ந்தெடுத்து வரும் அவர் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். அதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஐந்து திரைப்படங்களைப் பற்றி இங்கு காண்போம்.

வேதம் புதிது பாரதிராஜா இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் சத்யராஜ் பாலு தேவர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஜாதியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் சத்யராஜ் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருப்பார். அந்த அளவுக்கு ரொம்பவும் எதார்த்தம் காட்டி இருந்த அவரின் நடிப்பு பலரின் பாராட்டுகளையும் பெற்றது.

Also read: இரட்டை வேடங்களில் சத்யராஜ் கொடுத்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. யாராலும் நடிக்க முடியாத அந்த ஒரு கதாபாத்திரம்

ஒன்பது ரூபாய் நோட்டு தங்கர் பச்சான் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. இதில் சத்யராஜ் மாதவ படையாச்சி என்னும் ஒரு கிராமத்தானாக நடித்திருப்பார். 70 வயது முதியவராக விவசாயம் செய்வது, குடும்பத்தின் மேல் அன்பு செலுத்துவது, கோமணத்தோடு அந்தர் பண்ணுவது என்று சத்யராஜ் அப்படத்தில் அட்டகாசமான நடிப்பை கொடுத்திருப்பார். அந்த வகையில் இப்படம் அவருடைய பெயரை சொல்லும் ஒரு முக்கிய படமாக அமைந்துள்ளது.

பெரியார் ஈ வே ரா என்று அழைக்கப்படும் தந்தை பெரியாரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதில் பெரியார் கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ் அவரை அப்படியே கண் முன் நிறுத்தி இருப்பார். நல்ல வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Also read: அந்த நடிகையின் முன் அசிங்கப்படுத்திய ரஜினி.. ஈகோவால் இப்ப வர விரோதியாகவே இருக்கும் சத்யராஜ்

அழகேசன் கடந்த 2004 ஆம் ஆண்டு சத்யராஜ், பிரேமா ஆகியோரின் நடிப்பில் இப்படம் வெளிவந்தது. இதில் அழகேசன் என்னும் கதாபாத்திரத்தில் வெகுளியான, விவரம் அறியாத மனிதராக சத்யராஜ் நடித்திருப்பார். அதனாலேயே இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இன்னும் சொல்லப்போனால் இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட கேரக்டராகவும் இப்படம் அமைந்தது.

கனம் கோட்டார் அவர்களே மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சத்யராஜ், அம்பிகா நடித்திருப்பார்கள். அதில் பாஸ்கி என்ற வழக்கறிஞராக வரும் சத்யராஜ் எஸ் எஸ் சந்திரனின் அசிஸ்டெண்டாக வேலை செய்வார். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவர் அதை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. அவருடைய திரை வாழ்வின் சிறந்த படங்களில் இப்படமும் ஒன்றாக இருக்கிறது.

Also read: சத்யராஜ், ரஜினிக்கு நிகராக மிரட்டிய 5 படங்கள்.. இப்பவும் மறக்கமுடியாத என்னம்மா கண்ணு சௌக்கியமா!

- Advertisement -

Trending News