முதிர்ந்த வயதில் சினிமாவில் அறிமுகமான 5 நட்சத்திரங்கள்.. ஆல்-ரவுண்டராக அசால்ட் காட்டும் விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இளம் கதாநாயகர்களை விரும்பும் ரசிகர்களின் மத்தியில் முதிர்ந்த வயதில் தான் சினிமாவில் அறிமுகமாகி, அதன் பிறகு கிடைத்த வாய்ப்பை தக்கவைத்து,  5 நட்சத்திரங்கள் தங்களது இருப்பை நிலை நாட்டினார்கள். அதிலும் விஜய்சேதுபதி ஆல்-ரவுண்டராக சினிமாவில் அசால்ட் காட்டிக்கொண்டிருக்கிறார்.

அண்ணாச்சி சரவணன் அருள்: ஜவுளித் துறையில் கொடிகட்டிப் பறந்த சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனரான அண்ணாச்சி சரவணன் அருள், இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கிய தி லெஜண்ட் திரைப்படத்தில் நடித்து, தனது 51 வயதில் நடித்த முதல் படத்திலேயே கமர்ஷியல் ரீதியான வெற்றியை பெற்று தற்போது அடுத்தடுத்த படங்களுக்கான கதையை கேட்டுக் கொண்டிருக்கிறார்

என்னதான் இவரைப்பற்றிய நெகட்டிவ் கமெண்ட்கள் குவிந்தாலும் அதையெல்லாம் தூக்கி தூர போட்டுவிட்டு சினிமாவில் உச்சம் பெற, 50 வயதைத் தாண்டிய நிலையிலும் சாதிக்க துடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: 7 வருடங்களாக கிடப்பில் இருக்கும் விஜய் சேதுபதியின் திரைப்படம்.. ரிலீஸை உறுதி செய்த இயக்குனர்

விஜய் சேதுபதி: ஆரம்பத்தில் இவர் திரையில் தெரியாத அளவிற்கு சிறு சிறு கதாபாத்திரத்தில் தோன்றி, அதன் பிறகு தான் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அவர் கதாநாயகனாக நடிக்கும் போது அவருக்கு வயது 38 ஆகிவிட்டது.

இருப்பினும் இந்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என தேர்வு செய்யாமல் வயதான கதாபாத்திரத்திலும், திருநங்கை, வில்லன் என எந்த ரோல்லிலும் சினிமாவில் நடித்து ஆல்ரவுண்டராக விஜய் சேதுபதி அசால்டாக நடித்து தூள் கிளப்பி வருகிறார்.

விக்ரம்: நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இவர் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் முதல்முதலாக 1988ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான கலாட்டா குடும்பம் என்ற சீரியலின் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கி அதன் பிறகு 90ல் வெளியான என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இருப்பினும் இவருக்கு சினிமாவில் ஒரு பிடிப்பு கிடைத்தது சேது என்ற படம்தான்.  அப்போது அவருக்கு வயது 33. அதன்பிறகுதான் தில், ஜெமினி, தூள், சாமி போன்ற அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

Also Read: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர்.. கூட்டணி போட தயாராகும் விஜய் சேதுபதி

பிரகாஷ் ராஜ்: தொடக்கத்தில் சினிமாவில் நுழைவதற்கு படாதபாடு பட்ட பிரகாஷ்ராஜ், நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் கலக்கியவர். பெரும்பாலும் துணை நடிகராகவே பல படங்களில் நடித்தார். இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது அவருடைய 36-வது வயதில் தான். மேலும் இவருக்கு 2007 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

எம்எஸ் பாஸ்கர்: தொடக்கத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் மூலம் தனது சினிமா பயணத்தைத் துவங்கிய இவர், அதன்பிறகு அவருடைய 36-வது வயதில் தான் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இப்போது இவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் அவருடைய கதாபாத்திரம் வலுவாக பேசக்கூடிய அளவில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்கிறார்.

Also Read: அடேங்கப்பா முகத்தை பார்த்து அஞ்சு மாசம் ஆச்சு.. வெளிவராமல் இருக்கும் விஜய் சேதுபதியின் 2 படங்கள்

இவ்வாறு இந்த ஐந்து நடிகர்களுக்கும் தங்களுடைய முதிர்ந்த வயதில் தான் சினிமாவில் சாதிக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்று கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் விஜய் சேதுபதி ஆல்-ரவுண்டராக இந்திய திரையுலகில் அசத்தலான நடிப்பை வெளிக் காட்டி மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News