90ளில் இயக்குனராகவும், நடிகராகவும் கொண்டாடப்பட்ட 5 நட்சத்திரங்கள்.. இரண்டிலும் முத்திரை பதித்த மணிவண்ணன்

சினிமாவை பொறுத்தவரையில் பலர் இதில் பன்முகத்தன்மை கொண்டவர்களாக இருந்துள்ளனர். ஆனால் அவை எல்லாவற்றிலுமே முத்திரை பதித்தவர்கள் என்றால் சந்தேகம் தான். ஆனால் 90களில் இயக்குனராகவும், நடிகராகவும் 5 நட்சத்திரங்கள் கொண்டாடப்பட்டிருந்தனர். அவர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

பாக்யராஜ் : காமெடி படங்களை கைதேர்ந்து இயக்க கூடியவர் இயக்குனர் பாக்யராஜ். இவர் இயக்கிய பெரும்பான்மையான படங்களில் இவர் ஹீரோவாக நடித்திருந்தார். அவ்வாறு அந்த ஏழு நாட்கள், இன்று போய் நாளை வா, தூரல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு போன்ற படங்களில் அவரது இயக்கம், நடிப்பு இரண்டுமே அபாரம்.

Also Read : என்ன செய்வது என்று தெரியாமல் திணறிய எம்ஜிஆர்.. கை கொடுத்து காப்பாற்றிய பாக்யராஜ்

பார்த்திபன் : பல வித்தியாசமான முயற்சிகளை கையாள கூடியவர் பார்த்திபன். அந்த வகையில் இவரது இயக்கத்தில் சிங்கிள் சாட்டில் எடுக்கப்பட்ட இரவின் நிழல் படம் பாராட்டை பெற்றது. இந்நிலையில் 90களில் இவர் புதிய பாதை, உள்ளே வெளியே போன்ற பல படங்களை இயக்கி நடித்துள்ளார்.

மணிவண்ணன் : நூறாவது நாள், சின்னத்தம்பி பெரியதம்பி என சரத்குமாருக்கு பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் மணிவண்ணன். அதேபோல் நடிகராகவும் அமைதிப்படை, அவ்வை சண்முகி, சங்கமம் போன்ற பல படங்களில் மணிவண்ணன் முத்திரை பதித்துள்ளார். இவருடைய இழப்பு சினிமாவிற்கு பேரிழப்பாக அமைந்தது.

Also Read : கமலை ஜாதியை வைத்து பகிரங்கமாக திட்டிய மணிவண்ணன்.. ஜாக்கிரதையா இருக்கணும், அதிர்ந்த போன மேடை

பாரதிராஜா : கிராமம் சார்ந்த படங்களை கைதேர்ந்து எடுக்கக் கூடியவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் தன்னுடைய முதல் படமான பதினாறு வயதினிலே படத்திலேயே முத்திரை பதித்தார். இதைத்தொடர்ந்து 90களில் கடல் பூக்கள், என் உயிர் தோழன் போன்ற படங்களில் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பணியாற்றி உள்ளார்.

மகேந்திரன் : தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குனர் மற்றும் நடிகர் மகேந்திரன். இவர் பல படங்களுக்கு திரைக்கதை, வசனம், எழுதி உள்ளார். இவருடைய முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் போன்ற படங்கள் காலத்தால் அழியாதது. இந்நிலையில் தற்போதும் மகேந்திரன் படங்களில் நடித்து வருகிறார்.

Also Read : நீ ஏண்டி என் காலத்துல இல்லாம போன.. பாரதிராஜாவை ஏங்க வைத்த இரவின் நிழல் நடிகை

- Advertisement -