தமிழ் சினிமாவில் ஹீரோவை மிஞ்சிய ஸ்மார்ட் வில்லன்கள்.. 90களில் அழகில் மிரட்டிய விஜயகாந்த்தின் உயிர் நண்பன்

5 Smart villains who surpass the hero in Tamil cinema: 90’s காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பல வில்லன்கள் வந்து போனாலும்  சில வில்லன்கள் முன்னணி நட்சத்திரங்களுடன் கைகோர்த்து படத்தின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் போட்டனர். சைலன்ட் கில்லர் ஆக மிரட்டி இன்றும் நினைவை விட்டு நீங்காமல் உள்ள ஐந்து வில்லன்களை பற்றி காணலாம்.

டைகர் பிரபாகர்: கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கிய டைகர் பிரபாகர் அவர்கள் ரஜினி நடித்த முத்து திரைப்படத்தில் மீனாவை அபகரிக்கும் உறவுக்காரராக ஒரு சில காட்சிகளிலேயே வந்திருந்தாலும் பார்த்த அனைவரையும் மிரட்டி இருந்தார் எனலாம். ரஜினியிடம் அடி வாங்கிய பின்பும் ஒரு பக்க கண்ணாடியுடன் வந்த சீனை ரசிகர்கள் மறக்காமல் ஆரவாரம் செய்தனர். இவரது மனைவி நடிகை ஜெயமாலா கர்நாடகாவின் முன்னணி அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

சரண்ராஜ்: ரஜினிகாந்தின் பிரதான வில்லனாக தர்மதுரை,பணக்காரன்,பாண்டியன் போன்ற படங்களில் நடித்தவர் சரண்ராஜ். 600 படங்களுக்கு மேலாக நடித்து உள்ளார். பாட்ஷா படத்தில் ரஜினியின் நண்பராக மாணிக்கத்தை பாட்சாவாக மாற்றியவரே இவர்தான். ஜென்டில்மேன் படத்தில் திருடனை கண்டுபிடிக்கும் போலீஸ்காரராக நடிப்பில் அசத்தியிருந்தார் சரண்ராஜ். மேலும் இப்படத்தில் திருடனை கண்டுபிடிக்க தவறி போட்ட சபதத்திற்காக மொட்டை போடவும் செய்திருப்பார் சரண்ராஜ்.

Also read: விஜயகாந்த் வாழ்க்கை கொடுத்த 6 வில்லன்கள்.. மீசைக்கு பேர் போன ராஜேந்திரன்

ரகுவரன்: சினிமாவில் வில்லனாக இருந்து நடிகராக ஆசைப்படுபவர்கள் மத்தியில் கதாநாயகனாக இருந்து வில்லனாக மாறியவர் ரகுவரன். இவருடைய ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், ஒரே வார்த்தையை பல மாடுலேஷன்களில் பேசி சபாஷ் போட வைத்து விடுவார். திரையில் வில்லனாக மிரட்டினாலும் நடைமுறை வாழ்க்கையில் மிகவும் ஜென்டில்மேன் ஆக வாழ்ந்து விட்டு மறைந்தார் இந்த ரகுவரன்.

நெப்போலியன்:  மண்வாசனையுடன்  தமிழனுக்கே உரிய வீரத்துடன் வேட்டியை மடித்து கட்டி சண்டைக்கு தயாராகும் நெப்போலியன் வில்லன் வேடங்களிலும் பார்க்கும் ரசிகர்களை வெறி ஏற வைத்து விடுவார். பாரதிராஜாவின்  புது நெல்லு புது நாத்து, கிழக்கு சீமையிலே படத்தில்  தன் வயதுக்கு மீறிய தோற்றத்தில் வில்லனாக நடித்து பெயர் வாங்கினார் நெப்போலியன்.

தேவன்: விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ஹானஸ்ட் ராஜ் திரைப்படத்தில்   நண்பனை நம்ப வைத்து கள்ள நோட்டு அடிப்பவராக நடித்த தேவன் ஆர்ப்பாட்டம் இன்றி அமைதியாக கொல்லும் சைலன்ட் கில்லர் ஆக மிரட்டி இருந்தார். மேலும் பாட்சா, ரகசிய போலீஸ், மன்னவா, உல்லாசம், இமைக்கா நொடிகள் வரை  திரை உலகில் இவரது பயணம் நீண்டு கொண்டே இருக்கிறது. தற்போது  கேரள மாநிலத்தின் பாஜக துணை தலைவராகவும் உள்ளார்.

Also read: தர லோக்கலான கதாபாத்திரத்திற்கு பெயர் போன 6 வில்லன்கள்.. தனுசுக்கே தண்ணி காட்டிய விநாயகன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்