கதை விஷயத்தில் இயக்குனரை படாதபாடு படுத்தும் 5 நடிகர்கள்.. விஷால் செய்யும் பெரிய அக்கப்போர்

கதை விஷயத்தில் இயக்குனர்களை படாதபாடுபடுத்தி தான் நடிகர்கள் அந்த கதையை ஒத்துக் கொள்வார்கள். அதிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இந்த 5 நடிகர்கள் கால்ஷூட் கொடுக்கும் முன்பே, கறாராக இருக்கின்றனர். மேலும் விஷால் செய்யும் சேட்டைகள் இயக்குனர்களின் பெரிய தலைவலியாக இருக்கிறது.

சூர்யா: சூர்யாவை பொறுத்தவரை கால்ஷீட் கொடுத்து கொடுத்ததுதான். அவரிடம் சொன்ன கதையை விட்டுவிட்டு கதையில் ஏதாவது மாற்றம் செய்தால் மீண்டும் கால்ஷீட் கொடுக்க மாட்டார். இதனால் இயக்குனர்களும் இவரிடம் உசாராக முன்கூட்டியே தெளிவான கதையுடன் செல்வார்களாம்.

விஷால்: கதையை ஒரு தடவை சொல்லலாம், ரெண்டு தடவை சொல்லலாம். ஆனால் விஷாலை பொருத்தவரை இயக்குனர்களிடம் திரும்பத் திரும்ப கதையை சொல்ல சொல்லி கேட்பாராம். இதனால் இயக்குனர்கயே தெறித்து ஓடும் அளவுக்கு இவர் ஒரு படத்தை முடிப்பதற்குள் செய்யும் அழிச்சாட்டியம் கொஞ்ச நஞ்சமல்ல.

Also Read: பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் விஷால்.. சிம்புவிற்கு இழைக்கப்பட்ட அநீதி

சிவகார்த்திகேயன்: தளபதி விஜய் போல் தெளிவான பாதையில் சினிமாவின் செல்பவர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். அந்த அளவிற்கு நேர்த்தியான கதைகளை மட்டுமே தேர்வு செய்யும் சிவகார்த்திகேயன், அவரிடம் கதை சொல்லும் வரும் இயக்குனர்களின் கதையில் தலையீடு செய்வார். அவருக்கு ஏற்றார் போல் கதையை மாற்றிய பிறகுதான் அந்த படத்திலும் நடிக்க ஒத்துக் கொள்வார்.

ரஜினி: 71 வயதிலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பற்றி சொல்லவே வேண்டாம். இவர் தான் நடிக்கும் படத்தின் கதையை மட்டுமல்ல, அதில் யார் யார் நடிக்க வேண்டும் என்பதையும் தேர்வு செய்யவும் உரிமையையும் தாமாகவே எடுத்துக்கொள்வார்.

Also Read: கழுத்தை நெரித்த கடன், காப்பாற்றி விட்ட தயாரிப்பாளர்.. நன்றி கடனுக்காக சம்மதித்த சிவகார்த்திகேயன்

கமல்: உலக நாயகளாக தமிழ் ரசிகர்களின் மனதை கவரும் கமலஹாசன், கேட்கும் கதைகள் பிடிக்கவில்லையென்றால் கதையை மாற்ற சொல்லுவாராம். அவருடைய மனதில் எப்போது ஓகே என்ற எண்ணம் தோன்றுகிறதோ, அதுவரை இயக்குனர்களை கதையை மாற்றி கொண்டு வாருங்கள் என்று திருப்பி அனுப்பி விடுவார்.

இவ்வாறு இந்த 5 நடிகர்களும் இயக்குனர்கள் சொல்லும் கதையை அப்படியே நடிக்க மறுத்து விடுவார்கள். அதில் இவர்களது தலையீடு முழுமையாக இருக்கும். அதிலும் விஷால் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அவரிடம் சிக்கிய இயக்குனர்கள் பாவம் என்கின்ற அளவிற்கு அவர்களுடைய சேட்டைகளை காட்டி விடுவார்.

Also Read: விஷாலை வளர்த்துவிட்ட 5 படங்கள்.. ஓஸ்ட் ஆன ஆட்டிட்யூட்

- Advertisement -