பெரும் நஷ்டத்தால் காணாமல் போன 5 தயாரிப்பு நிறுவனங்கள்.. சூப்பர் ஸ்டாரால் பண நெருக்கடியில் சிக்கிய தனுஷ்

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் ஆதிக்கமாக இருந்த தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது இருக்கிற இடம் கூட தெரியவில்லை. அந்த அளவுக்கு தொடர் தோல்வி படங்களை கொடுத்ததால் அதிலிருந்து மீள முடியாமல் படம் தயாரிப்பதையே விட்டு விட்டார்கள். அவ்வாறு இப்போது காணாமல் போன தயாரிப்பு நிறுவனங்களை பார்க்கலாம்.

ஆஸ்கர் ரவிச்சந்திரன் : தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்தவர் ஆஸ்கர் வி ரவிச்சந்திரன். இவர் விஜயின் காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனார். அதேபோல் பல மொழி படங்களையும் விநியோகம் செய்துள்ளார். ஆனால் இப்போது படம் தயாரிப்பதை இந்நிறுவனம் நிறுத்தி விட்டது.

Also Read : பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பி ஏமாந்த 5 படங்கள்.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்கள்

ஏ எம் ரத்னம் : தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் நிறைய படங்கள் தயாரித்தவர் ஏ எம் ரத்னம். இவர் அஜித் உடைய ஆரம்பம் என்னை அறிந்தால், வேதாளம் போன்ற படங்களை தயாரித்திருக்கிறார். பல டாப் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்தும் இப்போது நிதி நெருக்கடியால் பட தயாரிப்பை கைவிட்டுள்ளார்.

வுண்டர்பார் பிலிம்ஸ் : தனுஷ் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோரால் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தயாரிப்பு நிறுவனம் வுண்டர்பார் பிலிம்ஸ். தனுஷின் 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இந்நிறுவனம் கால் பதித்தது. ரஜினியின் காலா படத்தால் பெரிய நஷ்டத்தை சந்தித்தது.

Also Read : ஊருக்கு மட்டும்தான் உபதேசமாம்.. அண்ணனுக்கு உதவாமல் டீலில் விட்ட தனுஷ்

ஏவிஎம் : ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பெரும்பான்மையான படங்கள் ஏவிஎம் நிறுவனம் தான் தயாரித்து வந்தது. சிவாஜி, எம்ஜிஆர் காலத்தில் இருந்தே பல படங்களை தயாரித்து வந்தது. அதன் பின்பு பல தயாரிப்பு நிறுவனங்கள் வர ஏவிஎம் காணாமல் போய்விட்டது. ஆனால் இப்போது புது பொலிவுடன் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கிளவுட் நயன் மூவிஸ் : கடந்த 2008 ஆம் ஆண்டு கிளவுட் நைன் மூவிஸ் தொடங்கப்பட்டது. இதன் உரிமையாளர் தயாநிதி அழகிரி. தமிழில் சூர்யாவின் வாரணம் ஆயிரம், பையா, நான் மகான் அல்ல போன்ற வெற்றி படங்கள் இந்நிறுவனம் கொடுத்துள்ளது. ஆனால் அதன் பிறகு வானம், அழகர்சாமி குதிரை என தொடர் தோல்வி படங்களை கொடுத்தது மிகுந்த நெருக்கடியை சந்தித்தது.

Also Read : பேராசையால் சிதைந்து போன ரஜினியின் கூட்டணி.. ஓவர் பந்தா காட்டியதால் துரத்தி விட்ட தயாரிப்பாளர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்