வில்லனாக மிரட்டிய 5 போலீஸ் கதாபாத்திரங்கள்.. கர்ணனில் பட்டையை கிளப்பிய கண்ணபிரான்

ஒரு படத்திற்கு ஹீரோவுக்கு முக்கியத்துவம் எந்த அளவுக்கு உள்ளதோ அதற்கு ஒருபடி மேலாக வில்லன்களுக்கு முக்கியத்துவம் உண்டு. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்கள் பெரிதும் பேசப்படுகிறது. அதிலும் காக்கி சட்டைப் போட்டு வில்லனாக நடிப்பது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. அப்படி போலீஸ் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த 5 நடிகர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

பகவதி பெருமாள்: விஜய் சேதுபதியின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தில் காமெடி நடிகராக அறிமுகமான இவர் பக்ஸ் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர். இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் இவரது பயம் கலந்த திருட்டு முழி வைத்து சிரிக்க வைத்தார். அந்த வகையில், 2018 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் எஸ்.ஐ.பெர்லின் கதாபாத்திரத்தில் நடித்த இவர், திருநங்கையாக வளம் வரும் விஜய் சேதுபதியை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் காட்சியில் மிரட்டியிருப்பார்.

Also Read: யார் யாரை ஒதுக்குறது.. தீண்டாமை விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்த விஜய் சேதுபத

தமிழ்: நடிகர் சூர்யா நடிப்பில் 2021 ஆம் ஆண்டு ஓடிடியில் ரிலீசான ஜெய் பீம் , உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. குற்றம் செய்யாத நபரை காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று போலீசார் அடித்தே கொடுமைப்படுத்தும் சம்பவத்தை தத்ரூபமாக இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இதில் முக்கிய போலீசாக வலம் வந்த நடிகர் தமிழ், எஸ்.ஐ குருமூர்த்தி கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். இவர் இப்படத்தில் மணிகண்டனை அடிக்கும் ஒவ்வொரு காட்சியும் பார்ப்போருக்கு அச்சமுறுத்தும் வகையில் அமைந்திருக்கும்.

நட்ராஜ் : நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான இப்படத்தில் முக்கிய வில்லனாக நடராஜ் நடித்திருப்பார். கண்ணபிரான் கதாபாத்திரத்தில் கண்ணாலேயே மிரட்டும் வகையில் இவரது வில்லத்தனம் இப்படத்தின் வெற்றிக்கு பெரும் பங்காக அமைந்தது. தனுஷுடன் இவர் க்ளைமாக்ஸில் போடும் சண்டைக்காட்சியில் பார்ப்போரின் மனதை கலங்கடிக்கும் வில்லனாக நடித்திருப்பார்.

Also Read: சமீபத்தில் வில்லன் அவதாரத்தில் அசத்திய 5 நடிகர்கள்.. மக்கள் வெறுத்து ஒதுக்கிய நட்டி நட்ராஜ்

லால்: நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்தாண்டு ரிலீசான டாணாக்காரன் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிப் பெற்றது. போலீஸ் பயிற்சியகத்தில் நடக்கும் அரசியல், வன்மம் உள்ளிட்டவற்றை இப்படம் திரைக்கு கொண்டு வந்து பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது எனலாம். இப்படத்தில் நடிகர் லால், ஈஸ்வரமூர்த்தி கதாபாத்திரத்தில் பயிற்சி எடுக்க வரும் இளைஞர்களின் போலீஸ் கனவை முறியடிக்கும் வகையில் அடிப்பது, கொல்வது என பல தண்டனைகள் கொடுக்கும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

சேத்தன்: நடிகர் சூரி முதல்முறையாக ஹீரோவாக நடித்த விடுதலை படத்தில் நடிகர் சேத்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படம் முழுவதும் காவல்துறை, போலீஸ், வில்லன் என அதிரடியாக அமைந்த நிலையில, நடிகர் சேத்தன் ராகவேந்தர் கதாபாத்திரத்தில் மிரள வைத்திருப்பார். இவருக்குள் இப்படி ஒரு வில்லத்தனம் உள்ளதா என கேட்கும் அளவிற்கு விடுதலை படத்தில் இவரது நடிப்பு தற்போது பெருமளவில் பேசப்பட்டு வருகிறது.

Also Read: சூரியின் நடிப்பில் மிரட்டிய விடுதலை.. ரெண்டு மணி நேரத்தில் ஹார்ட் பீட்டை எகிற செய்த கதைக்களம்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்