15 வருடங்களுக்கு மேல் கிரிக்கெட்டில் கலக்கிய 5 ஜாம்பவான்கள்.. அதில் ஒரு பெண்ணும் இருக்கிறாரே!

எந்த ஒரு விளையாட்டு ஆனாலும் அதில் பல வருடங்கள் சிரமமின்றி விளையாடுவது மிகவும் கடினம். அதில் வரும் கஷ்ட நஷ்டங்களை சகித்துக் கொள்ள வேண்டும், பல படிகளை தாண்டி போராட வேண்டும், அதுமட்டுமின்றி வரும் வாய்ப்புகளை விடாது துரத்தி பிடிக்க வேண்டும்.

தற்போது விளையாட்டு துறையில் வளர்ந்து வரும் வீரர்கள் அனைவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். இப்படி இருக்கையில் முன்னாள் வீரர்கள் சிலர் 15 வருடங்களுக்கு குறையாமல் விளையாட்டில் தங்களுடைய ஆளுமையை நிரூபித்துள்ளனர். அவர்களில் முக்கிய 5 வீரர்களை இதில் பார்க்கலாம்.

சச்சின் டெண்டுல்கர்: இவரைப் பற்றி அனைவரும் அறிந்ததே, சொல்லவே வேண்டாம் கிட்டத்தட்ட 22 வருடங்கள், 91 நாட்கள் கிரிக்கெட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். பல உடைக்க முடியாத உலக சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். 100 சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர், சச்சின் டெண்டுல்கர்.

Sachin-Cinemapettai.jpg
Sachin-Cinemapettai.jpg

சனத் ஜெயசூரியா: 21 வருடங்கள் 184 நாட்கள் இலங்கை அணிக்காக தனது பங்களிப்பை கொடுத்து அசத்தியுள்ளார். இவரை கண்டு அஞ்சாத பந்துவீச்சாளர்கலே இல்லை, அப்படி ஒரு அதிரடி ஆட்டம் ஆடக்கூடிய சாதனையாளர்.

Sanath-Cinemapettai.jpg
Sanath-Cinemapettai.jpg

மிதாலி ராஜ்: இன்றுவரை விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு வீராங்கனை மிதாலி ராஜ். இந்திய மகளிர் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். இவர் விளையாட வந்து 21 வருடங்கள் ஆகியும், இன்றும் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

Mithali-Cinemapettai.jpg
Mithali-Cinemapettai.jpg

கிறிஸ் கெயில்: யுனிவர்சல் பாஸ் என்று அனைவராலும் அழைக்க கூடியவர் கிறிஸ் கெயில். இவர் 19 வருடங்களாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார். இன்றுவரை நல்ல பார்மில் இவர் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Gayle-Cinemapettai.jpg
Gayle-Cinemapettai.jpg

ஜாவித் மியான்தத்: பாகிஸ்தான் அணி 1992-ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்றதற்கு முக்கியமான காரணமாக இவரை சொல்லலாம். அந்த தொடரில் 6 அரைசதங்கள் அடித்துள்ளார். இவர் 20 வருடங்கள் 272 நாட்கள் பாகிஸ்தான் அணிக்காக தனது பங்களிப்பை ஆற்றியுள்ளார்.

Javed-Cinemapettai.jpg
Javed-Cinemapettai.jpg

Next Story

- Advertisement -