5 வீரர்கள் பிடித்த 500 கேட்ச்சுகள்.. தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தால் மட்டுமே முடியும்

கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரர் 500 கேட்ச்சுகள் பிடிப்பது என்பது அரிதான ஒன்று. அதிவேக தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் இருந்தால் மட்டுமே ஒரு அணியின் விக்கெட் கீப்பர் அதிக கேட்ச்சுகள் பிடிக்க முடியும். அப்படி 500 காட்சிகள் பிடித்த 5 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை இதில் காணலாம்.

மார்க் பவுச்சர்: தென் ஆப்பிரிக்க அணிக்காக இக்கட்டான பல போட்டிகளில் கைகொடுத்து வெற்றி பெறச்செய்துள்ளார். இவர் ஒரு போட்டியில் கண்களில் அடிபடவே தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இவர் தென்னாபிரிக்கா அணிக்காக 467 போட்டிகளில் விளையாடி உள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்காக 952 கேட்ச்சுகளை பிடித்து அசத்தியுள்ளார்.

ஆடம் கில்கிறிஸ்ட்: இவரை கண்டு அஞ்சாத எதிரணியினரே கிடையாது. அந்த அளவிற்கு அதிரடி ஆட்டத்தில் அசத்தும் ஓபனிங் வீரர். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக மொத்தம் 813 கேட்ச்களை பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

எம்எஸ் தோனி: 538 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 634 கேட்ச்களை பிடித்து இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்து வருகிறார். இந்திய அணிக்காக பல வெற்றிகளை தேடித்தந்த இவரை மின்னல் வேக ஸ்டம்பிங் செய்வதில் அடிச்சிக்க எந்த ஒரு விக்கெட் கீப்பரும் இன்றுவரையிலும் கிடைக்கவில்லை என்பததே உண்மை.

இயன் ஹீலி: இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர்கள் இருவர் இடம்பிடித்துள்ளனர் . அதற்கு காரணம் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு தான். இவர்கள் துள்ளியமாக வேகப்பந்து வீசுவதில் வல்லவர்கள். அதனால் அதிக அளவு விக்கெட் கீப்பர் கேட்ச் ஆகும் என்பதில் ஆச்சரியமில்லை. 287 போட்டிகளில் 560 கேட்ச்களை பிடித்த நான்காமிடத்தில் இருக்கிறார் இயன் ஹீலி .

குமார் சங்ககாரா: இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமான இவர் அந்த அணிக்காக பல போட்டிகளில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறச் செய்துள்ளார். இலங்கை அணிக்காக 594 ஆட்டங்களில் கிட்டத்தட்ட  539 கேட்ச்சுகளை பிடித்து, இந்தப் பட்டியலில் ஐந்தாம் இடத்தை தக்க வைத்துள்ளார்.