காமெடி டிராக்கை ஓட்டி வந்த ரஜினியின் 5 படங்கள்.. ரெண்டு பொண்டாட்டி இடம் மாட்டி தவித்த வீரா

Rajini Best Comedy 5 Movies: ஒரு படத்தின் வெற்றி தோல்வி அப்படத்தில் இருக்கும் காதல் ரொமான்டிக், சண்டை காட்சிகள் என அனைத்தும் கலவையாக இருந்தால் மட்டுமே அதை தீர்மானிக்க முடியும். ஆனால் எப்போதுமே சிரிப்புக்கு பெயிலியரை இல்லை என்பதற்கு ஏற்ப காமெடி படத்திற்கு என்றைக்குமே வெற்றி உண்டு. அப்படி காமெடி டிராக்கை கையில் எடுத்து ரஜினி நடித்த படங்கள் இருக்கிறது. அதை பற்றி தற்போது பார்க்கலாம்.

தில்லு முல்லு: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு தில்லுமுல்லு திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, தேங்காய் சீனிவாசன், நாகேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஜினி அவருடைய வேலைக்காக முதலாளியாக இருக்கும் தேங்காய் சீனிவாசனிடம் பல பொய்களை சொல்லி விடுவார். அந்த வகையில் அதிலிருந்து தப்பிப்பதற்காக ஒவ்வொரு நிமிஷமும் பல தில்லுமுல்லு வேலைகளை பார்த்திருப்பார். இந்த ஒரு டிராக்கை படம் முழுவதுமாக நகைச்சுவையாக கொண்டுவரப்பட்டு பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும்.

வீரா: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வீரா திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், மீனா, ரோஜா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கிராமத்தில் இருக்கும் பொழுது ரஜினி நண்பர்களுடன் வெட்டிக்கதையே பேசிக்கொண்டு அங்கு இருப்பவர்களுடன் கலாட்டா பண்ணி வேடிக்கை காட்டி இருப்பார். அதன் பின் ரோஜாவை திருமணம் செய்து கொண்டு மீனாவையும் கல்யாணம் பண்ணிக்கிட்டு இரண்டு பொண்டாட்டியுடன் மாட்டிக்கொண்டு பல அக்கப்போர்களை நகைச்சுவையாக நடித்துக் காட்டியிருப்பார்.

Also read: பைத்தியக்கார பட்டத்தில் இருந்து ரஜினியை காப்பாற்றிய 3 பிரபலங்கள்.. 1000 படத்திற்கும் மேல் நடித்த ஒரே நடிகை

ராஜா சின்ன ரோஜா: எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு ராஜா சின்ன ரோஜா திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, ரகுவரன், கௌதமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஜினி எப்படியாவது ஒரு ஸ்டார் ஆகி விட வேண்டும் என்ற கொள்கையுடன் இருப்பார். அப்பொழுது ஒரு வீட்டில் வேலை பார்க்கும் ராஜாவாக இருக்கும் பொழுது அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்பதற்காக அங்கு இருக்கும் குழந்தைகளுடன் சேர்ந்து செய்யும் லூட்டிக்கு அளவே கிடையாது. அந்த வகையில் இப்படத்தில் காமெடி நடிகரை மிஞ்சும் அளவிற்கு பேச்சிலும் தோற்றத்திலும் ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார்.

ராஜாதி ராஜா: ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு ராஜாதி ராஜா திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி இரண்டு வேடங்களில் ராஜசேகர் மற்றும் சின்னராசு என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அந்த வகையில் சின்னராசு கேரக்டரில் இருக்கும் ரஜினி நதியாவின் பிறந்தநாளுக்கு பரிசளிக்கும் விதமாக ஒரு வாழைப்பழத் தாரை எடுத்துட்டு போகும்போது நடுவில் ஆனந்தராஜ் அனைத்தையும் ஆட்டை போட்டு விடுவார். அதைப்பற்றி பொருட்படுத்தாமல் வெறும் தாரை மட்டும் நதியாவிற்கு கொடுக்கும் காட்சிகள் அனைத்தும் நக்கலாக இருக்கும். அத்துடன் இதில் பயந்த சுபாத்துடன் நடிக்கும் அனைத்தும் பார்க்க நகைச்சுவையாக அமைந்திருக்கும்.

அதிசய பிறவி: எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு அதிசய பிறவி திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, கனகா, நாகேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஜினி தைரியமான காளையன் மற்றும் எதற்கெடுத்தாலும் பயந்த சுபாவத்தில் இருக்கும் பாலு என்ற இரண்டு கேரக்டரில் நடித்திருப்பார். அப்பொழுது தைரியமான காளை இன் ஆயுள் முடிவதற்கு முன்பே எமதர்மன் அவர் உயிரை எடுத்து விட்டதால் சொற்கலோகத்தில் எமதர்மனை பாடா படுத்தி வேறொரு உடம்பில் போவதற்குள் அனைவரையும் உண்டு இல்லைன்னு ஆக்கி இருப்பார். இந்த ஒரு விஷயம் லாஜிக்கே இல்லாமல் இருந்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவிற்கு நகைச்சுவையாகவும் அமைந்திருக்கும்.

Also read: ரஜினி தான் அடுத்த எம்.ஜி.ஆர் என சொன்ன காட்டு ராஜா.. உண்மையைப் போட்டு உடைத்த நக்கீரன்