நெகட்டிவ் ரோலில் நட்டி கலக்கிய 5 படங்கள்.. மணி இஸ் ஆல்வேஸ் அல்டிமேட், மறக்கமுடியாத சதுரங்க வேட்டை

ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் நடராஜன். தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த இவர், 2006 ஆம் ஆண்டு வெளியான நாளை படத்தில் அறிமுகமாகி நடித்தார். இந்நிலையில் இவர் வில்லனாக நடித்த 5 சூப்பர்ஹிட் படங்களை தற்போது பார்க்கலாம்.

கர்ணன்: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் மாபெரும் ஹிட்டானது. கண்ணபிரான் என்ற கதாபாத்திரத்தில் போலீசாக வலம் வரும் நடராஜன், அதிரடி வில்லனாக நடித்திருப்பார். இவரது வில்லத்தனத்தை பார்க்கும் பலருக்கும் வெறுப்பை ஏற்படுத்தும் அளவிற்கு இவரது நடிப்பும், வசனமும் இப்படத்தில் இருக்கும்.

Also Read: தனுஷ் கேரியரை க்ளோஸ் பண்ணும்படி அமைந்த 5 படங்கள்.. வளரும் போதே வந்த சோதனை

நம்ம வீட்டு பிள்ளை: 2019 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கினார். சிவகார்த்திகேயனை பழிவாங்க, தங்கையான ஐஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்துக்கொண்டு பல வில்லத்தனத்தை செய்வார். அய்யனார் கதாபாத்திரத்தில் நடித்த இவரது கதாபாத்திரம் இப்படம் வெற்றியடைய உறுதுணையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கதம் கதம்: இயக்குனர் பாபு தூயவன் இயக்கத்தில், நடிகர் நந்தா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் தான் கதம் கதம் . போலீஸ் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் வில்லன் போலீசாக பாண்டியன் கதாபாத்திரத்தில் நடராஜன் நடித்து அசத்தியிருப்பார்.

Also Read: ஆடி கார், 2 கோடி சம்பளம் கொடுத்து கௌரவித்த தயாரிப்பாளர்.. நன்றி மறந்த சிவகார்த்திகேயன்

வால்டர்: இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு நடிகர் சிபி சத்யராஜ் இயக்கத்தில் வெளியான வால்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. குழந்தை கடத்தல் சம்பந்தப்பட்ட கதையில் உருவான இபபடத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார்.

சதுரங்க வேட்டை: 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஹெச்.வினோத்தின் அறிமுகப்படமான சதுரங்க வேட்டை திரைப்படம், அந்தாண்டின் சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. பணத்திற்காக எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்ற ஹைடெக் மூளைக்கொண்ட காந்திபாபு கதாபாத்திரத்தில் நடராஜன் அசத்தியிருப்பார். இந்த கதாபாத்திரத்தில் இவரை தவிர வேறு யாரும் நடிக்க முடியாது என்ற அளவிற்கு, இவரது நடிப்பு இப்படத்தில் இன்று வரை பேசப்படுகிறது.

Also Read: கடன் தொல்லையிலும் நண்பனுக்காக ரிஸ்க் எடுத்த சிவகார்த்திகேயன்.. நயன்தாரா பட இயக்குனருடன் கூட்டணி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்