கேப்டன் திரையில் மறைந்து அழ வைத்த 5 படங்கள்.. தூக்குமேடையை புன்னகையோடு ஏற்று கொண்ட ரமணா

Vijayakanth: மக்களின் மனதில் என்றுமே கேப்டனாக சிம்மாசனம் போட்ட அமர்ந்திருக்கும் விஜயகாந்த் தன்னுடைய கடைசி மூச்சை நிறுத்தி இருக்கிறார். அவர் இதுவரை 157 படங்களில் நடித்திருக்கிறார். அதில் சுமார் 25 படங்களில் கடைசி சீனில் அவர் இறந்தது போல் காட்டப்பட்டு இருக்கும். அதில் முக்கியமான இந்த ஐந்து படங்களை என்றுமே மறக்க முடியாது.

வைதேகி காத்திருந்தாள்: ராசாவே உன்ன காணாத நெஞ்சு என்னும் வரிகள் இப்போது கேப்டனின் பிரிவுக்கு தான் சரியாக இருக்கும். ஒரு வளர்ந்து வரும் ஹீரோ வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் வெள்ளைச்சாமி கேரக்டரில் நடிப்பது என்பது ரொம்ப பெரிய விஷயம். இதில் கிளைமாக்ஸ் சீனில் ஒரு காதல் ஜோடியை சேர்ப்பதற்காக விஜயகாந்த் உயிரை விடுவது போல் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.

பூந்தோட்ட காவல்காரன்: விஜயகாந்தின் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்தார் செந்தில்நாதன் இயக்குனராக அறிமுகமானது பூந்தோட்ட காவல்காரன் படத்தில். இதில் ராதிகா அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். இரு காதல் ஜோடிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களின் திருமணத்திற்காக உயிரை விடுவார் விஜயகாந்த். அதன் கடைசி காட்சியில் இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் என்ற ஒரு வரி வரும். அது தான் தற்போது கேப்டனின் கடைசி தாலாட்டாக மாறி இருக்கிறது.

Also Read:ஊசி, மாத்திரைகளால் மரண வேதனையை அனுபவித்த கேப்டன்.. இறந்த பின் வெளிவரும் சோகம்!

செந்தூர பூவே: முரளி, விஜய், சூர்யா போன்றவர்களுக்கு எப்படி சினிமா ரசிகர்களிடையே விஜயகாந்த் அடையாளம் வாங்கிக் கொடுத்தாரோ அப்படித்தான் ராம்கியின் படத்திலும் நடித்தார். செந்தூரப்பூவே படத்தில் கேப்டன் சௌந்தரபாண்டியன் ஆக நடித்திருப்பார். ராம்கி மற்றும் நிரோஷாவின் காதலை சேர்த்து வைக்கும் அவர் கிளைமாக்ஸ் காட்சியில் இறந்து விடுவார்.

பேரரசு: பேரரசு கேப்டன் விஜயகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த படம். இதில் கண்ணியமிக்கும் காவல்துறை அதிகாரி காசி விஸ்வநாதனாகவும் , அப்பாவின் மரணத்திற்கு பழிவாங்கும் பேரரசு பாண்டியனாகவும் நடித்திருப்பார். படத்தின் கிளைமாக்ஸில் தன்னுடைய கடமைக்காக உயிரை நீக்க துணியும் காவல் அதிகாரி காசி விஸ்வநாதனை காப்பாற்றி விட்டு பேரரசு பாண்டியன் இறந்து விடுவார்.

தூக்கு மேடையை புன்னகையோடு ஏற்றுக் கொண்ட ரமணா

ரமணா: ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் படங்கள் எத்தனையோ வெளியானாலும் அது அத்தனைக்கும் விதை போட்டது கேப்டனின் ரமணா படம் தான். குற்றம் செய்தவன் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்று சொல்லி ரமணா சிரித்துக்கொண்டே தூக்கு மேடையில் ஏறுவது கண்களை கலங்க வைத்திருக்கும். கேப்டன் இறந்ததிலிருந்து இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தான் சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி கொண்டு இருக்கிறது.

Also Read:அல்ப விஷயத்துக்காக எதிரியாய் மாறிய வடிவேலு.. கடைசி வரை பெரிய மனுஷன் என நிரூபித்த கேப்டன்

- Advertisement -spot_img

Trending News