அசின் சினிமாவிலிருந்து துரத்தி அடிக்கப்பட காரணமான 5 படங்கள்.. விஜய் முயற்சி செய்தும் முடியல

Asin: நடிகை அசின் தற்போது சினிமாவில் இருந்து பீல்ட் அவுட் ஆகி இருந்தாலும், இன்று வரை ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்படுகிறார். நடித்த ஒரு சில படங்களிலேயே அப்போது இருந்த முன்னணி ஹீரோயின்களை பின்னுக்கு தள்ளினார் அசின். அவருடைய அழகு மற்றும் நடிப்பிற்கு கிடைத்த வாய்ப்பு தான் பாலிவுட் சினிமா.

சல்மான் கானுடன் இணைந்து நடித்திருந்தாலும் அடுத்தடுத்து ஐந்து தோல்வி படங்கள் தான் இவருக்கு கிடைத்தது. அதன் பின்னர் தளபதி விஜய்யுடன் இணைந்து காவலன் படத்தில் நடித்திருந்தாலும், அந்த படம் அந்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. இதனால் தான் இனி சினிமாவே வேண்டாம் என கும்பிடு போட்டுவிட்டு ஒதுங்கி விட்டார்.

அசினின் 5 தொடர் தோல்வி பாலிவுட் படங்கள்

ஹவுஸ்புல்: நடிகர் அக்ஷய் குமார் மற்றும் ஜான் ஆபிரகாம் உடன் அசின் இணைந்து நடித்த படம் ஹவுஸ்புல். இந்த படம் 100 கோடி வரை வசூல் செய்தது. ஆனால் அக்ஷய் குமாருக்கு பெயர் கிடைத்த அளவுக்கு, அசினுக்கு இந்த படத்தின் மூலம் பெயர் கிடைக்கவில்லை. இருந்தாலும் அப்போதைய மூவி பிரமோஷன்களில் கரீனா கபூருக்கு இணையாக நான் இந்தி சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கிறேன் என அலட்டிக் கொண்டார் அசின்.

Also Read:நடிப்பே வராத விஜய்யை நடிக்க வைத்து தூக்கி விட்ட 3 இயக்குனர்கள்.. தளபதிக்கு திருப்புமுனை படங்கள்

ரெடி: சல்மான் கான் மற்றும் அசின் இணைந்து நடித்த ரெடி படம் 2011 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் ரிலீஸ் சமயத்தில் சல்மான் மற்றும் அசின் டேட்டிங் செய்வதாக கூட செய்திகள் வெளியாகின. அசினின் பாலிவுட் தோல்விக்கு இந்த வதந்தியும் ஒரு முக்கிய காரணம். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் சல்மான் கானுக்காக மட்டுமே வசூலில் ஜெயித்தது.

போல் பச்சான்: இயக்குனர் ரோகித் செட்டி இயக்கத்தில் அசின், அஜய் தேவ்கான், அபிஷேக் பச்சன் ஆகியோர் இணைந்து நடித்த படம் போல் பச்சான். இந்த படம் இந்தியில் ரிலீஸ் ஆகி பெரிய வெற்றியைப் பெற்ற கோல்மால் படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டது. இந்த படம் வணிக ரீதியாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

கில்லாடி 786: நடிகை ஆசின் மீண்டும் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்த படம் கில்லாடி 786. இந்த படத்தில் மிதுன் சக்கரபர்த்தியும் இணைந்து நடித்த. மசாலா கலவை ஆக வெளியான இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்த நிலையில், ரிலீசுக்கு பிறகு தோல்வியை தழுவியது.

ஆல் இஸ் வெல்: ஹிந்தி படங்கள் எதுவும் கை கொடுக்காததால் அசின் இரண்டு வருட இடைவெளி எடுத்திருந்தார். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனுடன் இணைந்து ஆல் இஸ் வெல் என்னும் படத்தில் நடித்தார். இந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இதுதான் அசின் சினிமாவின் நடித்த கடைசி படம் கூட. இந்த படத்தை முடித்த கையோடு அவர் திருமணம் செய்து கொண்டார்.

Also Read:விஜய்க்கு வராத சங்கம் ஏன் த்ரிஷாவுக்கு மட்டும் வராங்க.? மன்சூருக்காக குரல் கொடுத்த சீமான்