டிராக்கை மாற்றியதால் சுந்தர் சிக்கு ஃப்ளாப்பான 5 படங்கள்.. வடிவேலு இல்லாததால் மொக்கை வாங்கிய மூவிஸ்

Director Sundar C: தயாரிப்பு மற்றும் இயக்கத்தை தவிர்த்து, இவர் மேற்கொண்ட 17 படங்களில் நடிகராகவும் அசத்தியவர் சுந்தர்.சி. அதில், குறிப்பிட்ட படங்கள் காமெடி சப்ஜெக்ட்டில் அமைந்து மாபெரும் ஹிட் கொடுத்துள்ளது.

இவர் இயக்கத்தில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா, அருணாசலம், வின்னர், அரண்மனை போன்ற படங்கள் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது. அவ்வாறு இருப்பின் தன் டிராக்கை மாற்றி புது முயற்சி எடுத்து ஃப்ளாப் ஆன 5 படங்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: அட ரஜினி, விஜய் கையிலேயே இத்தனை படங்கள் இல்லையே.. கமல் லிஸ்டில் இருக்கும் 4 படங்கள்!

தகதிமிதா: 2005ல் காதல் மற்றும் காமெடி கலந்து வெளிவந்த படம் தான் தகதிமிதா. இப்படத்தில் அங்கீதா, விவேக், யுவ கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். குடும்ப சூழலுக்கு ஏற்ப காதலை மேற்கொள்ளும் கதாபாத்திரத்தில் கதை அமைக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் நகைச்சுவைக்காக விவேக் களமிறங்கி இருப்பார். இருப்பினும் போதிய வரவேற்பு இன்றி இப்படம் தோல்வியை தழுவியது.

தீயா வேலை செய்யணும் குமாரு: 2013ல் நகைச்சுவையும், காதலும் கலந்து சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் தீயா வேலை செய்யணும் குமாரு. இப்படத்தில் சித்தார்த், ஹன்சிகா மோத்வானி, கணேஷ் வெங்கட்ராமன், சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். இப்படத்தில் சந்தானத்தின் நகைச்சுவை பெரிதும் பேசப்பட்டது. மேலும் இப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று, வணிகரீதியான வெற்றியை பெற்று தந்தது. இருப்பினும் இப்படம் சுந்தர்.சி இயக்கத்தில் பெரிதாக பேசப்படவில்லை.

Also Read:எனக்கு பின்னாடி வந்தவன் எல்லாம் ஹீரோ ஆயிட்டான்.. பொறாமையில் பொங்கிய மீசை ராஜேந்திரன்

வந்தா ராஜாவாக தான் வருவேன்: 2019ல் ஆக்சன் கலந்த நகைச்சுவை படமாக வெளிவந்த இப்படத்தில் சிலம்பரசன், மேகா ஆகாஷ், ரோபோ சங்கர், பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். குடும்பத்தில் ஏற்படும் மனக்கசப்பை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டு இருக்கும். இருப்பினும் இப்படம் போதிய எதிர்பார்ப்பு இன்றி தோல்வியை தழுவியது.

ஆக்சன்: 2019ல் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஆக்சன். இப்படத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். விஷால் நடிப்பில் ஆக்சன் படமாய் பெரிய எதிர்பார்ப்பை கொண்டு வந்த இப்படம் எந்த ஒரு சுவாரிசியம்மம் இல்லாமல் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. ஆகையால் வணிக ரீதியாக சுமாரான வசூலை பெற்று தந்தது.

Also Read: வில்லனாய் கலக்கிய ஐந்து 80ஸ் ஹீரோக்கள்.. தனுஷிற்கு தண்ணி காட்டிய கார்த்திக்

தலைநகரம் 2: சமீபத்தில் வெளிவந்த ஆக்சன் கலந்த காமெடி படம் தான் தலைநகரம் 2. இப்படத்தில் பாலக் லால்வாணி, சுந்தர் சி, யோகி பாபு, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் மட்டும் நிறைந்து, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், போதிய விமர்சனங்கள் இன்றி தோல்வியை தழுவியது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்