லியோதாஸ் மாதிரி பொய்யான பிளாஷ்பேக்கை உருட்டிய 5 படங்கள்.. பிசிறு தட்டாமல் லோகி செய்த சம்பவம்

Fake Flashbacks 5 Movies: பொதுவாக படங்களில் பல ட்விஸ்ட்டுகளை வைத்து மக்களை அதிக அளவில் பார்க்க வைக்கும் பார்ட் என்றால் அது ஃப்ளாஷ்பேக் காட்சிகள் தான். அதற்கு காரணம் படத்தில் அதிகமான சஸ்பென்களை வைத்து அதை உடைக்கும் காட்சிகளில் பிளாஷ்பேக்கிற்கு முக்கியத்துவத்தை கொடுத்து வைத்திருப்பார்கள். அதனாலேயே அந்தப் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்து விடும்.

ஆனால் ஒரு சில படங்களில் அந்த பிளாஷ்பேக்கை பொய்யாக கொண்டுவரப்பட்டிருக்கும். அப்படி வெளிவந்த ஐந்து படங்களில் பிளாஷ்பேக் கதையை தற்போது பார்க்கலாம். அந்த வகையில் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்த வாலி படத்தில் பொய்யான ஃபிளாஷ்பேக் வைக்கப்பட்டிருக்கும். அதாவது சிம்ரன் மனதில் இடம் பிடிப்பதற்காக அஜித் ஏற்கனவே லவ் ஃபெயிலியர் ஆன மாதிரி ஜோதிகாவை வைத்து ஒரு காதல் டிராக் வந்திருக்கும்.

ஆனால் அப்படி ஒரு விஷயமே நடந்திருக்காது. சும்மா அஜித் கற்பனை கதையை வைத்து உருட்டப்பட்டு இருக்கும். அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் திரில்லர் படமாக வெளிவந்த பீட்சா படத்தில் ஒரு பேய் வீட்டில் போய் நான் மாட்டிக் கொண்டேன் என்று சுற்று வட்டாரத்தையே சும்மா பொய் சொல்லி நம்ப வைத்திருப்பார். ஆனால் இது உண்மை போலவே பார்ப்பவர்களையே நம்ப வைத்து இருப்பார். அந்த அளவிற்கு இயக்குனர் கதையை கச்சிதமாக எடுத்திருப்பார்.

அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தில் பசுபதி மற்றும் கமல் இருவரும் சேர்ந்து ரோகினிடம் ஜெயிலுக்கு வந்த காரணத்தை சொல்வார்கள். ஆனால் இதில் பசுபதி சொல்வது அனைத்துமே பொய்யான விஷயங்கள் ஆகத்தான் இருக்கும். ஆனாலும் இதற்கு ஏற்ற மாதிரி அனைத்து சம்பவங்களுமே பக்காவாக ஜோடிக்கப்பட்டிருக்கும். இதில் கமல் சொல்வது உண்மையாக இருக்கும் ஆனால் சாட்சிகள் எதுவுமே இல்லாததால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும். இப்படி ஃப்ளாஷ்பேக் காட்சியை நம்பும் படியாக பசுபதி கட்டுக் கதையை அவிழ்த்து விடுவார்.

அடுத்ததாக சிம்பு இரட்டை வேடங்களில் நடித்த மன்மதன் படத்தில் மொட்ட மதன் இறந்து போய்விடுவார். ஆனால் இவர் உயிருடன் தான் இருக்கிறார் என்று அனைவரையும் நம்ப வைத்து அனைத்து தவறுகளையும் செய்து போலீஸிடம் தப்பித்துக் கொள்வார் மன்மதன் சிம்பு. அந்த வகையில் மொட்டை மதன் இறந்து போய்விட்டார் என்று யாரும் கண்டு பிடிக்க முடியாது. மன்மதன் தான் தவறு செய்து வருகிறார் என்று சொல்வதற்கு சாட்சி இருக்காது அளவிற்கு பொய்யாக ஜோடிக்கப்பட்டிருக்கும்.

இதற்கு அடுத்ததாக சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்திலும் அதிரடியான ஒரு பிளாஷ்பேக் வைக்கப்பட்டிருக்கும். இந்த பிளாஷ்பேக்கை மன்சூர் அலிகான் கௌதம் மேனனிடம் சொல்லி இருப்பார். அதாவது லியோதாஸ் கதை எந்த மாதிரியானது, எப்படிப்பட்டவர் அவர் யார் என்கிற உண்மை மன்சூர் அலிகான் மூலம் தான் தெரியவரும். அப்படிப்பட்ட இந்த பிளாஷ்பேக் முற்றிலும் பொய்யானது. ஆனால் இதை யாரும் கண்டுபிடிக்காத அளவிற்கு பிசிறு தட்டாமல் லோகேஷ் தரமான சம்பவத்தை செய்திருப்பார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்