தமிழில் மார்க்கெட்டை பிடித்த மம்முட்டியின் 5 படங்கள்.. இன்றுவரை நட்பு பாராட்டும் தளபதி பட தேவா

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தமிழ் சினிமாவிலும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். வேறு மொழி நடிகர்கள் இங்கு மார்க்கெட்டை பிடிப்பது மிக கடினம். ஆனால் அதை மிக சுலபமாக செய்துள்ளார் நடிகர் மம்முட்டி. அவ்வாறு தமிழில் மார்க்கெட்டை பிடித்த மம்முட்டியின் 5 படங்களை பார்க்கலாம்.

மௌனம் சம்மதம் : மம்முட்டி, அமலா, சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் மௌனம் சம்மதம். இந்த படத்தில் இளையராஜா இசையமைத்த அனைத்து பாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் மம்முட்டி இந்த படத்தில் வக்கீல் ராஜாவாக நடித்து அசத்தி இருந்தார்.

Also Read :3 வருடங்களுக்குப் பிறகு மம்முட்டி, மோகன்லாலுக்கு கிடைத்த பெருமையை தட்டி தூக்கி பிரபலம்.!

மறுமலர்ச்சி : மறுமலர்ச்சி பாரதி இயக்கத்தில் மம்முட்டி, தேவயானி, மனோரமா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மறுமலர்ச்சி. இப்படத்தில் ஒரு கணவன், மனைவிக்கு உண்டான அன்பை அழகாக சொன்ன படம். இந்தப் படத்தில் ராசு என்ற கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருந்தார்.

தளபதி : மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினி, மம்முட்டி, அரவிந்த்சாமி, ஷோபனா ஆகியோர் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படம் தளபதி. சூர்யா, தேவா என்ற இரட்டை கதாபாத்திரம் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இன்றும் நட்பை பாராட்டும் படமாக தளபதி படம் உள்ளது.

Also Read :70 வயதிலும் கரடுமுரடாக உடலை ஏற்றி வைத்திருக்கும் மம்முட்டி.. வைரலாகும் ஸ்டைலிஷ் புகைப்படம்

ஆனந்தம் : லிங்குசாமி இயக்கத்தில் மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி மற்றும் பல பிரபலங்கள் நடித்து வெளியான குடும்ப படம் ஆனந்தம். அண்ணன், தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்த ஆனந்தம் படம் எடுக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்து ஆனந்தம் படம் சாதனை படைத்தது.

மக்களாட்சி : ஆர்கே செல்வமணி இயக்கத்தில் மம்முட்டி, ஐஸ்வர்யா, ரோஜா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மக்களாட்சி. தேர்தலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. சேதுபதி என்ற கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து அசத்தியிருந்தார்.

Also Read :பழைய எனர்ஜியுடன் களம் இறங்கிய சூப்பர் ஸ்டார்.. 32 வருடங்களுக்குப் பிறகு மாஸ் இயக்குனருடன் கூட்டணி

- Advertisement -spot_img

Trending News