சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அப்பா சென்டிமென்டில் கண்கலங்க வைத்த அஜித்தின் 5 படங்கள்.. தாரை தாரையாக கண்ணீர் வரச் செய்த விசுவாசம்

அல்டிமேட் ஸ்டார் அஜித் ஆக்சன், செண்டிமெண்ட் கதை அம்சம் எதுவாக இருந்தாலும் பின்னி பெடல் எடுக்கக்கூடியவர். இந்நிலையில் அப்பா சென்டிமென்டில் அவரது படங்கள் வெளியாகி ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது. அந்த வகையில் ரசிகர்களை கவர்ந்த 5 அஜித்தின் அப்பா சென்டிமென்ட் படங்களை பார்க்கலாம்.

ஜி : லிங்குசாமி இயக்கத்தில் அஜித், திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜி. இந்த படத்தில் வாசு என்ற கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார். அவரது தந்தையாக விஜயகுமார் நடித்திருந்தார். தன் மகன் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என பல தியாகங்கள் செய்யும் அப்பாவாக அசத்தியிருந்தார்.

Also Read : வீட்டிலிருந்து வந்த மரணச் செய்தி.. வெளிநாட்டிலிருந்து விரைந்த அஜித்

கிரீடம் : ஏ எல் விஜய் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் கிரீடம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இந்த படத்தில் அஜித்தின் தந்தையாக ராஜ்கிரண் எதார்த்தமாக நடித்திருப்பார். தனது மகனுக்கு கிடைக்க இருக்கும் காவல்துறை வேலை சில செயல்களால் தவறவிட்டு விடுவானோ என்ற அவரது நடிப்பு அபாரமாக இருந்தது.

வரலாறு : அஜித் மூன்று வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் வரலாறு. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் பரதநாட்டிய கலைஞரான அஜித் தனது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் என பல விஷயங்களை மறைக்கிறார். கடைசியில் தந்தை இந்த விஷயங்களை எதுக்காக மறைத்தார் என தெரிந்த உடன் அஜித் தனது தவறை உணர்கிறார்.

Also Read : அஜித்தின் வெற்றி கூட்டணியை இணையவிடாமல் செய்த சதி.. இயக்குனருக்கு கட்டளை போட்ட விஜய்யின் மாமா.!

என்னை அறிந்தால் : அஜித்தின் அதிரடி ஆக்சன் படமாக வெளியானது என்னை அறிந்தால். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் திரிஷாவின் மகளை தன் மகளாக பாவித்து அஜித் வளர்ப்பது ரசிகர்களை கண்கலங்கச் செய்தது.

விசுவாசம் : சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா ஜோடி போட்டு நடித்த படம் விசுவாசம். குடும்ப சென்டிமென்ட் ஆக எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதில் மகளின் அன்புக்காக ஏங்கும் அஜித்தின் காட்சிகள் ஒரு உண்மையான தந்தையை பிரதிபலித்திருப்பார்.

Also Read : அஜித், விஜய் உச்சத்தில் இருக்க இதுதான் காரணம்.. அவர்களை வியந்து பார்த்த கோவை சரளா

- Advertisement -

Trending News