கொடுத்த வாக்கை நம்பி சம்பளம் வாங்காமல் நடிக்கும் 5 நடிகர்கள்.. இன்றுவரை போற்றப்படும் ஜெய்ஷங்கர்

நடிகர்கள், நடிகைகளை பொருத்தவரைக்கும் தங்களுடைய சம்பள விஷயத்தில் ரொம்பவும் கறாராக இருப்பார்கள் என்று நிறைய சம்பவங்களில் கேள்விப்பட்டதுண்டு. சில சம்பள விவகாரங்கள் கோர்ட், கேஸ் வரை சென்று விட்டு வரும். இதில் ஒரு சில கோலிவுட் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் வார்த்தையை நம்பி ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்துவிட்டு பின்னர் வாங்கிக் கொள்வார்களாம். இதனால் நிறைய தயாரிப்பாளர்கள் இவர்களை புகழ்ந்து பேசியதும் உண்டு.

சிவாஜி: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பை மட்டுமே தன்னுடைய வாழ்க்கையாக எண்ணி கடைசி வரை வாழ்ந்தவர். புகழின் உச்சியில் இவர் இருந்திருந்தாலும் சம்பள விஷயத்தில் அவ்வளவாக அலட்டிக்கொள்ள மாட்டாராம். மேலும் கொஞ்சம் வயதானதற்குப் பிறகு சிவாஜிக்கு தன்னுடைய சம்பளம் என்னவென்றே தெரியாதாம். நீ கொடுப்பதை கொடு என்று சொல்லி நடித்து விடுவாராம். செக்கை இவரிடம் கொடுத்தால் கூட அதை தன்னுடைய மகன் ராம்குமாரிடம் எவ்வளவு என்று கூட பார்க்காமல் கொடுத்துவிடுவாராம்.

Also Read:ஜெய்சங்கரை காதலிப்பதாக ஏமாற்றிய தில்லானா நடிகை.. ஆண் பாவத்தால் நடுத்தெருவுக்கு வந்த கொடுமை

எம்ஜிஆர்: தமிழ் சினிமா உலகின் வள்ளலாக இருந்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். எத்தனையோ பேருக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த இவர் தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் சம்பள விஷயத்தில் பிரச்சனை பண்ணியதே இல்லையாம். உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தபோது பேசிய சம்பளத்தை விட கொஞ்சம் அதிகமாக எம்ஜிஆருக்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எம்ஜிஆர் அதை வாங்க மறுத்து விட்டாராம்.

ஜெய்சங்கர்: மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் ஜெய்சங்கர். தமிழ் சினிமாவில் கௌபாய் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியதே இவர்தான். எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு இவர் சம்பளமே வாங்காமல் படம் பண்ணிக் கொடுத்திருக்கிறாராம். நட்பு ரீதியாக படம் வெற்றி பெற்ற பிறகு கூட சம்பளத்தை வேண்டாம் என்று கூட மறுத்திருக்கிறாராம்.

Also Read:ஜெய்சங்கர் போல் விஜய் சேதுபதிக்கு வந்த நிலைமை.. அந்த 2 படத்தால் மொத்த கேரியருக்கும் வந்த சோதனை

பிரபு: இளைய திலகம் பிரபுவுடன் பணியாற்றிய சக கலைஞர்கள் அனைவருமே அவருடைய பண்பான குணத்தை பற்றி தான் பெருமையாக பேசுவார்கள். தன் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்து கூட நடிப்பவர்களுக்கு ஆசையாக பரிமாறுவாராம். இதுவரை பிரபு எந்த ஒரு தயாரிப்பாளருடனும் சம்பள விஷயத்தில் பிரச்சனை செய்தது இல்லையாம். படம் முடிந்த பிறகு கூட பொறுமையாக வாங்கிக் கொள்வாராம்.

பிரசாந்த்: டாப் ஸ்டார் பிரசாந்த் 90 மற்றும் 2000ன் தொடக்கத்தில் முன்னணி ஹீரோவாக இருந்தவர். தளபதி விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார் இவருக்கு பின்னால் வளர்ந்து வந்து தான் இன்று உச்ச நட்சத்திரங்களாக இருக்கிறார்கள். பல வெற்றி படங்களை கொடுத்த பிரசாந்த் சம்பள விஷயத்தில் பிரச்சனை பண்ணவே மாட்டாராம். இதை பல தயாரிப்பாளர்கள் தங்களுடைய பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்கள்.

Also Read:ஜெய்சங்கர் போலவே எந்த சர்ச்சையிலும் சிக்காமல் ஒரே ஹீரோ.. மக்களை கவர்ந்த நாயகன்!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்