ராஜமவுலியே கேட்டாலும் 2024 வரை நோ கால் சீட்.. சகட்டுமேனிக்கு நடித்து தள்ளும் 5 நடிகர்கள்

கோலிவுட்டின் மிக முக்கியமான நடிகர்களில் சிலருக்கு கடந்த வருடத்திலிருந்து அதிர்ஷ்டக் காத்து வீச ஆரம்பித்திருக்கிறது. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் என இரண்டு வருடத்திற்கு பயங்கர பிசியாக இருக்கின்றனர். முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராஜமௌலியே வந்து கதை சொன்னாலும் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு படங்களை கைவசம் வைத்திருக்கின்றனர்.

எஸ் ஜே சூர்யா: கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான அஜித் மற்றும் விஜய்க்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்தான் எஸ் ஜே சூர்யா. ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் தன்னுடைய சிறந்த நடிப்பினாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வரும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் உடன் இவர் இணைந்து நடித்திருக்கும் உயர்ந்த மனிதன் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Also Read: இந்த 6 இயக்குனர்கள் படம்னாலே ‘ஏ’ சர்டிபிகேட் கன்ஃபார்ம்.. கதையை விட அந்த மாதிரி காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது

லாரன்ஸ்: நடன இயக்குனராக இருந்து ஹீரோவாகவும், இயக்குனராகவும் ஆனவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ். இவருக்கு மற்ற படங்களை விட பேய் படங்கள், காமெடி படங்கள் நன்றாக செட் ஆகிவிட்டன. இவருக்கு அடுத்தடுத்து நாகா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்கள் வரிசையில் இருக்கின்றன. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மெகா ஹிட் அடித்த சந்திரமுகி இரண்டாம் பாகத்திலும் இவர் நடத்து வருகிறார்.

விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி பொருத்தவரை அவர் கைவசம் எப்போதுமே படங்கள் நிரம்பி தான் வருகின்றன. விக்ரம் பட வெற்றிக்கு பிறகு ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் சேதுபதிக்கு மட்டும் அடுத்தடுத்து பிசாசு 2, விடுதலை, மைக்கேல் என மொத்தம் பத்து படங்கள் வரிசையில் இருக்கின்றன.

Also Read: பிளாப் இயக்குனருடன் கூட்டணி போடும் விஜய் சேதுபதி.. கடைசி படமே ஓடல, இதுல 4வது வேரையா?

சமுத்திரக்கனி: இயக்குனர் மற்றும் நடிகர் என்ற பன்முகத் திறமை கொண்டவர் தான் சமுத்திரக்கனி. தமிழ் சினிமாவில் தன்னுடைய சிறந்த நடிப்பை காட்டிக் கொண்டிருந்த சமுத்திரக்கனி தற்போது மற்ற மொழி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சமுத்திரகனி அடுத்தடுத்து இந்தியன் 2, தலைக்கூத்தல், பப்ளிக், அகம் பிரம்மாஸ்மி போன்ற படங்களிலும் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

பிரகாஷ் ராஜ்: தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என இந்திய மொழி சினிமாக்களில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர் தான் பிரகாஷ்ராஜ். சில வருடங்களாக தமிழ் மொழியில் நடிக்காமல் இருந்த இவர் சமீபத்தில் திருச்சிற்றம்பலம், பொன்னியின் செல்வன், விருமன் திரைப்படங்களின் மூலம் தமிழுக்கு வந்தார். இப்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் அடுத்து ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருக்கிறது.

Also Read: பிரகாஷ்ராஜின் உண்மை முகம்.. 50 கோடி கொடுத்தாலும் அந்த மாதிரி நடிக்க மாட்டேன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்