தொடர்ந்து ஒதுக்கப்படும் 5 இந்திய வீரர்கள்.. ஓய்வு முடிவுக்கு தள்ளப்படும் 2 ஜாம்பவான்கள்

சமீப காலமாக இந்திய அணி மூன்று விதமான போட்டிகளுக்கும் மூன்று விதமான அணிகளை பயன்படுத்துகிறது. இது இந்திய அணியை பொருத்தவரை ஒரு நல்ல முயற்சி, ஆனால் பல திறமை உள்ள வீரர்களை வெளியில் உட்கார வைப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படும் 5 வீரர்களை இதில் பார்க்கலாம்.

ஷிகர் தவான்: ஐசிசி போட்டிகள் என்றாலே மீசையை முறுக்கிக் கொண்டு வரும் ஷிகர் தவான் சமீபகாலமாக இந்திய அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இவரை அணிக்குள் சேர்ப்பதும் ட்ராப் செய்வதுமாய் இருக்கின்றனர். இப்படி இருந்தால் இவருடைய கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.

மனிஷ் பாண்டே: இந்திய அணியின் அடுத்த ராகுல் டிராவிட் என்றெல்லாம் இவர் வந்த புதிதில் பெருமையாக பேசப்பட்டார், அதற்கு தகுந்தார் போல் இவர் நன்றாக விளையாடவும் செய்தார். குறிப்பாக இவர் பவுண்டரி எல்லைக்கோட்டில் மிகவும் அற்புதமாக ஃபீல்ட் செய்யும் திறமையாளர் இப்பொழுது எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை.

தினேஷ் கார்த்திக்: மீண்டும் மீண்டும் தன் திறமையை நிரூபித்து இந்திய அணிக்குள் நுழைகிறார். பல 20 ஓவர் போட்டிகளை இந்திய அணிக்காக வென்று கொடுத்துள்ளார். தோனிக்கு பின் இந்திய அணியில் போட்டியை வென்று கொடுப்பதில் இவருக்கு ஒரு தனி இடம் உண்டு. ஆனால் இவரும் தொடர்ந்து அணியில் செலக்ட் ஆகுவது இல்லை.

க்ருனால் பாண்டியா: சமீபத்தில் பட்ட காயத்தினால் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்குள் இடம்பெறவில்லை.அவர் இடத்தை இப்பொழுது கனகச்சிதமாக அக்சர் பட்டேல் பிடித்துள்ளார். ஆனால் அந்த இடத்திற்கும் க்ருனால் பாண்டியா தகுதி உடையவர்தான். இவர் இந்திய அணியில் விளையாடியே கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.

ருத்ராஜ் கேக்வாட்: சென்னை அணிக்காக விளையாடிய இவர் ஒரு அதிரடி பேட்ஸ்மேன். நல்ல டைமிங் ஆட்டம் ஆட கூடிய ருத்ராஜ் கேக்வாட் இந்திய அணியில் இருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். அதற்கு காரணம் இவர் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன். இந்திய அணியை பொறுத்த வரைக்கும் முதலாவதாக விளையாடுவதற்கு நிறைய அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.இவருடைய இடமும் இந்திய அணியில் கேள்விக்குறியாகி வருகிறது.

- Advertisement -