டெரர் வில்லனாக மேடி செய்த 5 சம்பவம்.. சைத்தான் ஆக மிரட்டும் விக்ரம்

5 movies acted madhavan terror villain: சினிமாவில் வெளிவரும் படங்களை பொருத்தவரை எந்த அளவு ஹீரோவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே மாதிரி வில்லன்களுக்கும் கிடைத்தால் மட்டுமே அந்த படம் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெறுகிறது. ஏனென்றால் அந்த ஒரு படங்களை மிகப்பெரிய அளவில் தூக்கி நிறுத்துவது மிரட்டலான நடிப்பு தான். அதனாலயே ஹீரோக்கள் சில சமயங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். அப்படி மாதவன் டெரர் வில்லனாக நடித்து செய்த சம்பவங்களை பற்றி பார்க்கலாம்.

நிசப்தம்: ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு நிசப்தம் திரைப்படம் வெளிவந்தது. இதில் மாதவன், மைக்கேல் மேக்சன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் தமிழில் சைலன்ஸ் என்ற பெயரில் வந்தது. மேலும் அனுஷ்கா காது மற்றும் வாய் பேச முடியாத மௌன ஓவியர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவருடைய வருங்கால கணவர் மாதவன் கொடூரமான விதத்தில் கொலை செய்யப்பட்டதை பார்த்தும் அதை சொல்ல முடியாத சாட்சியாக இருப்பது தான் கதையாக நகரும்.

சவ்யசாச்சி: சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு சவ்யசாச்சி திரைப்படம் வெளிவந்தது. இதில் நாக சைதன்யா, மாதவன், பூமிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது 21 நபர்கள் பயணிக்கும் பேருந்து விபத்து கொள்ளாகிறது. அதில் நாக சைதன்யா மட்டும் தப்பித்துக் கொள்கிறார். பிறகு இவர்களுக்கு வரும் மறைமுகமான பிரச்சனைகளும் துயரங்களும் யாரால் என்பதை கண்டுபிடிக்கும் விதமாக கதை நகரும். இதில் மாதவன் கொடூர வில்லத்தனத்தை காட்டி நடித்திருப்பார்.

Also read: சூனியக்கார சைக்கோவாக மிரட்டும் மாதவன்.. ஜோதிகாவின் ஈர கொல நடுங்க வைக்கும் ஷைத்தான் ட்ரெய்லர்

ஆயுத எழுத்து: இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு ஆயுத எழுத்து திரைப்படம் வெளிவந்தது. இதில் சூர்யா, மாதவன், சித்தார்த், மீராஜாஸ்மின், திரிஷா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் மூன்று கேரக்டர்கள் வெவ்வேறு விதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும். இதில் மாதவனின், இன்பா கேரக்டர் எப்படி என்றால் இந்த சொசைட்டி எப்படி அழுக்கு பிடித்து போய் இருக்கிறது. அது என்ன நமக்கு செய்திருக்கிறது அதனால் நானும் இப்படித்தான் இருப்பேன் என்று ரவுடித்தனத்தை தூக்கலாக கொடுத்திருப்பார்.

விக்ரம் வேதா: புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு விக்ரம் வேதா திரைப்படம் வெளிவந்தது. இதில் மாதவன், விஜய் சேதுபதி, பிரேம் குமார், ஷர்தர் ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் மாதவன், விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆரம்பத்தில் வில்லன் மாதிரி இவருடைய கேரக்டரை கொண்டு வந்து கடைசியில் ஹீரோ கதாபாத்திரத்துடன் இணைத்து முடித்திருப்பார். அந்த வகையில் இப்படத்தில் மாதவனின் நடிப்பு டெரராக இருக்கும்.

சைத்தான்: விகாஷ்பால் இயக்கத்தில் நாளை அனைத்து திரையரங்குகளிலும் சைத்தான் திரைப்படம் வெளிவர உள்ளது. இதில் அஜய் தேவகன், மாதவன், ஜோதிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை ஆனது அமானுஷ்ய சக்தியை கொண்ட மாதவன் தன் கண் பார்வையால் மற்றவர்களை வசியம் செய்து தன்னுடைய கண்ட்ரோலில் வைத்து ஆட்டிப்படைக்கும் விதமாக கொடூர சைத்தான் ஆக நடித்திருக்கிறார். இவரிடம் தெரியாத்தனமாக ஜோதிகாவின் மகள் மாட்டிக் கொண்டு சித்திரவதைபடுவதை படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

Also read: அப்பா வழியே வேண்டாம்ன்னு உதறிய 5 வாரிசுகள்.. உதயநிதி, மாதவன் பசங்க போடும் போடு

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்