தாவணி போட்ட தீபாவளி மீரா ஜாஸ்மினின் மறக்க முடியாத 5 படங்கள்.. கிறுக்குத்தனமாக விஜய்யை காதலித்த மீரா

5 Hit Movies starring Actress Meera Jasmine: தாவணி போட்ட தீபாவளியாக தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட மீரா ஜாஸ்மின் தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றவர் ஆவார். இன்று பிறந்தநாள் காணும் மீரா ஜாஸ்மினின்  அட்டகாசமான நடிப்பில் வெளிவந்த 5 படங்கள் இதோ!

ரன்: 2002 ஆண்டு வெளிவந்த ரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மீரா ஜாஸ்மின்.  லிங்குசாமி இயக்கத்தில் உருவான ரன் திரைப்படத்தில் வித்யா பாலன், ரீமாசென் என இருவரும் ஒப்புக்கொள்ளாமல் போகவே வாய்ப்பு மீரா ஜாஸ்மினுக்கு வந்தது.  இப்படத்தின் மூலம் சிறந்த புதுமுக நடிகைக்கான விருதை வென்றார் மீரா.

கஸ்தூரிமான்: மலையாள இயக்குனர் லோகிதாஸ் இயக்கத்தில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் தயாரான கஸ்தூரிமான் திரைப்படம் ஒரு கிளாசிக் ட்ராமாவாக இருந்தது. தன் குடும்பத்தை காப்பாற்றும் பொருட்டும், காதலனை படிக்க வைக்கும் பொருட்டும் பகுதி நேர வேலையில் ஈடுபடும் மீரா ஜாஸ்மின் தவறான நோக்கம் கொண்ட அக்கா கணவரிடம் இருந்து தப்பிக்க முடியாமல் கொலை செய்து தன்னை தற்காத்துக் கொள்ளும் புரட்சிபெண்ணாக நடித்திருந்தார்.

Also read: திருமணமான ஒரு வருடத்திலேயே விவாகரத்து.. மீண்டும் சிங்கிளான பிரியமான நடிகை

சண்டக்கோழி: மீரா ஜாஸ்மினுக்கு தமிழ் திரையில் ஒரு சிறப்பான இடத்தை கொடுத்தது என்றால் அது லிங்குசாமியின் சண்ட கோழியாக தான் இருக்க முடியும் இந்த படத்தில் போக்கிரி பெண்ணாக மிமிக்கிரி எல்லாம் செய்ததோடு அழுத்தமான கேரக்டரில் நடித்திருந்தார் மீரா ஜாஸ்மின்.

ஆயுத எழுத்து: இதில் கொலை கொள்ளை யில் ஈடுபடும் இன்பாவின் மனைவியாக நடித்திருந்தார் மீரா ஜாஸ்மின். தவறான தொழில் செய்து இருந்தாலும் தன் மீது அபாரமான காதலை கொண்டிருக்கும் கணவனை விட்டுக் கொடுக்க முடியாத அழுத்தமான கதாபாத்திரத்தில் கொள்ளை கொண்டிருந்தார் மீரா.

புதிய கீதை: 2003 ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த புதிய கீதை திரைப்படத்தில் எந்த நடிகையும் ஏற்கத் தயங்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தை துணிச்சலாக ஏற்று தனக்குரிய பங்களிப்பை சிறப்புடன் செய்து முடித்திருந்தார் மீரா. விஜய்யை கண்மூடித்தனமாக காதலிக்கும் லூசு பெண்ணாக கிறுக்குத்தனமாக நடித்து சிறப்பு செய்திருந்தார் மீரா.

Also read: உனக்கு அரசியல் ஆசை வரவே கூடாதுன்னு தடுத்து நிறுத்தப்பட்ட விஜய்யின் 5 படங்கள்.. அப்ப G.O.A.T கசாப்பு கடைக்கு போவது உறுதியா?

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்