ஃபகத் பாசில்னா பயம் வரும் 5 படங்கள்.. மாமன்னன் தூக்கி வளர்த்த ரத்தினவேலு

5 hit movies for Fahadh Faasil: கண்கள் வழியே  கதாபாத்திரத்தின் உணர்வினை உணர வைத்த ஃபகத் பாசில் தன்னம்பிக்கையின் தலைக்கனம் ஆவார். ஆம்  தோல்வி படத்தின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஃபகத் பாசில் ஏழு வருட விடா முயற்சிக்கு பின் தன்னுடைய தளராத தன்னம்பிக்கையினால் கடின உழைப்பினால் தமிழ், தெலுங்கு மலையாளம் என அனைத்திலும் முன்னணி நடிகராகவும் வில்லனாகவும் நிரூபித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளிவந்த 5 ஹிட் படங்கள் இதோ,

வேலைக்காரன்: சிவகார்த்திகேயன் மற்றும் ஃபகத் பாசில் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்மார்ட் வில்லனாக அனைவரையும் கலங்கடித்து இருந்தார் ஃபகத் பாசில். சாமானியன் இப்படத்தை பார்க்கும் போது, இப்படி எல்லாம் மனிதர்கள் இருப்பார்களோ என்னும் அளவு அந்த கதாபாத்திரத்தை உணர வைத்தார் ஃபகத் பாசில்.

சூப்பர் டீலக்ஸ்: யார்யா நீ? எங்க இருந்து சாமி வந்த? என்று ரசிகர்கள் நினைக்கும் வண்ணம் இத்திரைப்படத்தில் சமந்தா மற்றும் ஃபகத் பாசில் இருவரும் போட்டி போட்டு நடித்திருந்தனர். துரோகம் பண்ணின  மனைவியை கரைத்துக் கொட்டுவதாக இருக்கட்டும், அதேசமயம் அவளை காப்பாற்றி காதலை வெளிப்படுத்தும் தருணத்திலும் பல அப்லாஸ்களை வாங்கி உயர்ந்துவிட்டார் ஃபகத் பாசில்.

Also read: மலையாள ஹீரோக்களை வெறுப்பேற்றிய பகத் பாசில்.. வரிஞ்சு கட்டிக்கொண்டு தமிழுக்கு வரும் அமுல் பேபி

விக்ரம்: லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் உளவாளியாக வந்து ரசிகர்களை உலுக்கி எடுத்து இருந்தார் ஃபகத் பாசில். கமலுக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தி கண்களாலே கைது செய்திருந்தார் ஃபகத் பாசில்.

புஷ்பா: அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஃபகத் பாசில் அவர்கள் கடைசி சில காட்சிகளை வந்திருந்தாலும் பார்வையாளர்களை பயத்தில் நடுங்க வைத்தார் எனலாம். ஜீப்பில் அமர்ந்திருக்கும் போது இருக்கையில் சரி செய்வதற்காக தடாலென பின்னாடி அமர்ந்திருந்த ரவுடியை சுட்டது அனைவருக்கும் கிலியே ஏற்படுத்தி அவரது கதாபாத்திரத்தை உணர வைத்தது.

மாமன்னன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு உதயநிதி ஃபகத் பாசில் ஆகிய முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தின் கருத்தினை உள்வாங்கி வில்லன் ரத்தினவேலு கதாபாத்திரத்தில் நடிப்பு அரக்கனாக மிரட்டினார்  ஃபகத்.

வேட்டையன்: ஜெயிலரின் வெற்றிக்குப் பின் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  மற்றும் பகத் பாசில் நடித்துக் கொண்டிருக்கும் படம்  வேட்டையன்.  இப்படத்தில் தலைவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், இதுவும் தன் கேரியரில் அதிகமாக பேசப்படும் என்றும் கூறியுள்ளார் ஃபகத் பாசில்.

Also read: நீ எல்லாம் ஜெயிக்கணும் டா என வாய்ப்பு கொடுத்த விஜய் சேதுபதி.. மோட்டார் மோகனுக்கு அடித்த ஜாக்பாட்