80-களில் அதிக சம்பளம் வாங்கிய 5 டாப் ஹீரோக்கள்.. அப்ப புடிச்ச இடத்தை 20 வருஷமா போராடி தக்க வைக்கும் ரஜினி!

தமிழ் சினிமாவில் 80 களின் முன்னணி நாயகர்களாக வலம் வந்த நடிகர்கள் அன்றைய காலத்திலேயே லட்சக்கணக்கில் அதிகமாக சம்பளம் வாங்கி நடித்தார்கள். தற்போதுள்ள முன்னணி நடிகர்கள் அனைவரும் வருடத்திற்கு ஒரு திரைப்படம் மட்டுமே கொடுத்து விட்டு, அதற்காக பல கோடி வரை சம்பளம் வாங்கிக்கொண்டு வரும் நிலையில், 80களில் சினிமா தான் தங்களது வாழ்க்கை என்று நினைத்து நடித்த நடிகர்களுக்கு அவர்களின் மார்கெட்டுகளுக்கு ஏற்றார் போல் சம்பளத்தை உயர்த்தி தயாரிப்பாளர்கள் கொடுத்துள்ளனர்.

பிரபு : நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனாக இருந்தாலும், நடிகர் பிரபுவிற்கு சினிமா வாய்ப்புகள் அவ்வளவு எளிதாக வரவில்லை. அவரது குண்டான உடல் தோற்றம், ஒரு விதத்தில் மிகப் பெரிய மைனஸாக அமைந்தது. இருந்தாலும் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த பிரபு ரசிகர்களை ஈர்த்தார். மேலும் ரஜினிகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோருடன் டபுள் ஹீரோ கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியவர். இதனிடையே நடிகர் பிரபுவிற்கு அன்றைய காலத்தில் 15 லட்ச ரூபாய் வரை ஒரு படத்துக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டது.

Also Read : ஹீரோக்களை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரே காமெடியன்.. சரத்குமார், பிரபு வாங்கியதை விட அதிகம் வாங்கிய நபர்

சத்யராஜ் : ஆரம்பத்தில் வில்லனாக வலம் வந்த நடிகர் சத்யராஜ் பின்னர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அன்றைய காலத்தில் 6.2 அடி உயரத்தில் இருந்த ஒரே நடிகரென்றால் அது சத்யராஜ் தான். தொடர்ந்து ஆன்ட்டி ஹீரோ கதாபாத்திரம், போலீஸ் கதாபாத்திரம், காமெடி கதாபாத்திரம் என பல திரைப்படங்களில் நடித்து வந்த சத்யராஜிற்கு 20 லட்சம் ரூபாய் வரை ஒரு படத்திற்கு சம்பளமாக வழங்கப்பட்டது.

விஜயகாந்த் : புரட்சி கலைஞர், கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் ஆரம்ப காலகட்டத்தில் இவரது தோற்றத்தின் காரணமாக பட வாய்ப்புகளே வராமல் இருந்தது. அதற்கும் மேலாக எந்த ஒரு நடிகையும் விஜயகாந்துடன் சேர்ந்து நடிக்க வரமாட்டார்களாம். அப்படி பல இன்னல்களையும் சந்தித்து தனது நடிப்பு திறமை மூலமாக தன்னை மேம்படுத்திக் கொண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த விஜயகாந்திற்கு 80 காலகட்டம் ஒரு பொற்காலம் எனலாம். புலன் விசாரணை உள்ளிட்ட பல திரைப்படங்கள் விஜயகாந்தின் கேரியருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதனிடையே நடிகர் விஜயகாந்திற்கு 30 லட்சம் வரை சம்பளமாக ஒரு படத்திற்கு கொடுக்கப்பட்டது

Also Read : பிரேமலதாவிற்கும் முன் விஜயகாந்த் காதலித்த நடிகை.. குழிபறித்த நட்பு, கறாராக பேசி பிரித்துவிட்ட மனைவி

கமலஹாசன் : 80 காலகட்டத்திலிருந்து தற்போது வரை இவரது நடிப்பு, நடனம், பேச்சு என அனைத்திலும் ஆச்சரியத்தில் ஆழ்த்துபவர்தான் உலகநாயகன் கமலஹாசன். அப்போதெல்லாம் கமலஹாசனின் திரைப்படங்கள் வந்தால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும். ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என அனைத்திலும் பின்னி எடுத்த கமலஹாசன், பெண்களின் கனவுக்கண்ணனாக வலம் வந்தார். இதனிடையே 40 லட்சம் ரூபாய் வரை அப்போதே கமலஹாசனுக்கு சம்பளமாக வழங்கப்பட்டது.

ரஜினிகாந்த் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து வந்த நிலையில், ஹீரோவாக அறிமுகமாகி நடிக்க ஆரம்பித்தார். தனது ஸ்டைலில் மூலமாகவும், தனது வித்தியாசமான நடிப்பின் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்திழுத்தார். மேலும் ஆண்டி ஹீரோவாகவும் ரஜினிகாந்த் நடித்து வந்த நிலையில், சில திரைப்படங்களில் இவரது ஆக்ஷன் காட்சிகளை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் திரையரங்குகளில் கூட்டம் கூடினார்கள். 80 களில் அதிக சம்பளம் வாங்கிய ஒரே தென்னிந்திய நடிகராக வலம் வந்த ரஜினிகாந்திற்கு 60 லட்சம் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டது.

Also Read : விநியோகஸ்தர்கள் தலையில் துண்டை போட்ட 5 படங்கள்.. ரஜினிகாந்த் படத்துக்கு இந்த நிலைமையா?

Next Story

- Advertisement -