10 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த 5 ஹீரோயின்கள்.. இன்றுவரை அடிச்சிக்கவே முடியாத ஐஸ்வர்யா ராய்

சுமார் பத்து வருடங்களாக தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் ஐந்து கதாநாயகிகள் எப்போதும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர். அதிலும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அடித்துக் கொள்ள ஆளே இல்லை.

மீனா: 90களில் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்தவர்தான் மீனா. மீனாவின் கண்களுக்காகவே இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆகின. இன்றுவரை இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோயினியாக மீனா, இப்போதும் சப்போட்டிங் கேரக்டர்களில் திரையில் தோன்றுகிறார்.

குஷ்பூ: 80’ஸ் மற்றும் 90’ஸ் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இருந்த குஷ்பூ, சின்னத்தம்பி படம் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமானார். குஷ்புவிற்கு ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்கு மிகவும் பிரபலமாக இருந்தார். தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி இருக்கும் குஷ்பூ, சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் முறை பெண்ணாக அண்ணாத்த படத்தில் நடித்து அசத்தினார்.

Also Read: மெலிந்து ஸ்லிம்மாக மாறிய குஷ்பூவின் புகைப்படங்கள்.. விட்டா 51 வயதிலும் ஒரு ரவுண்டு வருவாங்க போல!

ஐஸ்வர்யா ராய்: இன்று உலக அழகி என்று சொன்னாலே முதலில் ஞாபகத்திற்கு வருபவர் ஐஸ்வர்யா ராய் தான். இவர் இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் வெகு விரைவிலேயே ஜோடி சேர்ந்தார். இவர் தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து, பிறகு பாலிவுட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கேரக்டரில் மீண்டும் கோலிவுட்டில் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

ஜோதிகா: தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை ஜோதிகா, திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பதன் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸ் துவங்கினார். அத்துடன் தன்னுடைய கணவர் சூர்யாவுடன் இணைந்து நல்ல நல்ல படங்களை தயாரித்து கொண்டிருக்கிறார். இப்போதும் ஜோதிகாவை கண்டு இளசுகள் கிறங்குவதுண்டு.

Also Read: சீமராஜா படத்திற்கு பின் வில்லியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோ பெரிய சண்டியர் ஆச்சே எப்படி சமாளிப்பாரோ!

சிம்ரன்: இடுப்பழகி என்று சொன்னாலே ரசிகர்களின் நினைவிற்கு வருபவர் நடிகை சிம்ரன். இவர் 90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். அத்துடன் இவர் விஜய், அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களுடன் நடித்து, இன்றளவும் தனக்கான இடத்தை ரசிகர்களிடம் திரையில் சப்போர்ட்டிங் கேரக்டராகவும், தனது வில்லத்தனமான ரோலிலும் மிரட்டிக்கொண்டிருக்கிறார்.

இவ்வாறு இந்த 5 நடிகைகளும் ஒருபோதும் தங்களது மார்க்கெட்டை இழக்காமல் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கின்றனர். அத்துடன் இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் இன்றுவரை ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: கவர்ச்சியைத் தாண்டி நடிப்பில் முத்திரை பதித்த 5 நடிகைகள்.. அதான் இப்ப வரைக்கும் மார்க்கெட் நிக்குது

- Advertisement -