எல்லா கதாபாத்திரத்தையும் அடிச்சு நொறுக்கும் 5 ஹீரோயின்கள்.. நாசருக்கு சவால் விடும் ஊர்வசி

Best Acting Actress: பொதுவாக சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களுக்கு மட்டும் தான் அதிகமான ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் தகர்த்து எறியும் வகையில் சில நடிகைகள் அவர்களுடைய நடிப்பால் அனைவரையும் தன் வசப்படுத்தி இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அதிலும் இவர்களை நம்பி எந்த கதாபாத்திரத்தையும் கொடுக்கலாம். அசால்ட் ஆக நடித்து தும்சம் பண்ணுவார்கள் என்று சொல்லும் அளவிற்கு சில நடிகைகள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி பார்க்கலாம்.

லட்சுமி: இவரைப் பற்றி முதலில் சொல்ல வேண்டும் என்றால் தமிழ் சினிமாவில் தேசிய விருது வாங்கிய முதல் பெண்மணி என்ற பெருமை இவரையே சாரும். அந்த அளவிற்கு நடிப்புத் திறமையை எதார்த்தமாக நடித்துக் காட்டக்கூடியவர். புரட்சிக் கலைஞர் எம்ஜி ஆர் காலகட்டங்களில் இருந்து சினிமாவில் பயணித்து வருகிறார். இவரை நம்பி எந்த கதாபாத்திரத்தையும் கொடுத்து விடலாம் அசால்ட்டாக அடிச்சு தூக்கி விடுவார் என்று பெயரைப் பெற்றிருக்கிறார்.

Also read: திருமணத்திற்கு பின்னும் பிஸியாகி சுற்றி வரும் ஜோதிகா.. அக்கட தேசத்தில் அடித்த ஜாக்பாட்

ரேவதி: இவர் 80, 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்திருக்கிறார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து இவருடைய திறமையை வைத்து ரசிகர்களிடம் பேரும் புகழையும் சம்பாதித்திருக்கிறார். இவர் எல்லா விதமான கதாபாத்திரத்திலும் நடிப்பால் அசத்தக்கூடியவர். மேலும் அந்த காலத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்திருக்கிறார். அத்துடன் தேவர் மகன் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

ராதிகா: இவர் 80, 90களில் முன்னணி நடிகையாக அனைவரது மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்து இருக்கிறார். இவர் நடிக்காத கதாபாத்திரமே கிடையாது என்றே சொல்லலாம். இவருடைய துணிச்சலான பேச்சும், அசைக்க முடியாத நடிப்பும் அனைவரையும் வியப்படையச் செய்திருக்கும். அந்த அளவிற்கு நடிப்பை அடித்து நொறுக்கி இருப்பார். தற்போது வரை சினிமாவில் இருந்து ஒதுங்காமல் இவருடைய நடிப்புத் திறமையைக் காட்டி வருகிறார். நடிப்புக்கு வயதை இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப கம்பீரமாக நடித்து வருகிறார்.

Also read: பாக்யராஜ் பதற பதற அடித்த ஊர்வசி.. குழந்தைத்தனமான நடிப்பில் வெளிவந்த 5 படங்கள்

ஊர்வசி: இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் பல விருதுகளை பெற்று அடுக்கிக் கொண்டே வந்திருக்கிறார். எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்ற மாதிரி நடிப்பதில் மிகவும் புத்திசாலித்தனமானவர். அதிலும் காமெடி கதாபாத்திரம் மற்றும் குணசித்திர நடிப்பு என்று இவருடையத் திறமையால் பின்னி பெடல் எடுத்து இருப்பார். எப்படி நாசர், நடிப்பில் ஒரு விதமான ஸ்டைலை பாலோ பண்ணுகிறாரோ. அதேபோல இவருக்கு என்று தனி வொர்க் ஸ்டைலை ஆக்கிரமித்துக் கொண்டார்.

ஜோதிகா: இவருடைய நடிப்புக்கு பலரும் அடிமையாக இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அதிலும் இவர் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி திரைப்படத்திற்கு பிறகு நடிப்பின் நாயகி, இவரை மிஞ்சும் அளவிற்கு யாரும் இல்லை என்று சொல்லும் படி அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதைத்தொடர்ந்து பல வித்தியாசமான படங்களில் கதையின் நாயகியாக நடித்து இவருக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் திருமணம் ஆகி இரண்டு குழந்தைக்கு அம்மா ஆன பிறகு கூட ஹீரோயினாக நடிக்கிறார் என்றால் அது எல்லாம் இவருடைய திறமைக்கு கிடைத்த வெகுமதி தான்.

Also read: ரேவதி நடிப்பில் ஹிட்டான 6 படங்கள்.. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் மொத்த லிஸ்ட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்