ஓவர் வெயிட் போட்டு காணாமல் போன 6 நடிகைகள்.. 2-3 படங்களில் ஆன்ட்டி போல் மாறிய ஹீரோயின்கள்

சினிமா உலகில் நிலைத்து இருக்க வேண்டும் என்றால் அதற்கு கடின உழைப்பு ரொம்பவும் அவசியம். கிட்டத்தட்ட சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்தே கோலிவுட்டில் ஹீரோயின்களுக்கு எந்த ஸ்டிரியோடைப்புகளும் இல்லாமல் இருந்தது. சாவித்ரி, கே.ஆர். விஜயா, சரிதா போன்ற நாயகிகளிடம் நடிப்பு மட்டுமே ரசிக்கப்பட்டதே தவிர உடல் அளவு இல்லை. ஆனால் கடந்த பத்து வருடங்களுக்கு மேல் சினிமாவில் சைஸ் ஸிரோ என்பது கட்டாயமாகி விட்டது. பாலிவூட்டில் இருந்த இந்த சைஸ் ஸிரோ இப்போது தென்னிந்திய சினிமாவுக்கும் தொற்றிக்கொண்டது, உடல் எடை கூடி சினிமா வாய்ப்பை இழந்த நடிகைகள்,

கிரண்: விக்ரமின் ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த கிரண் முதல் படத்திலேயே சற்று அதிக எடையுடன் தான் இருந்தார். அடுத்தடுத்து படவாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதிக உடல் எடை கூடி விட்டார். இதனால் ஒரு பாடலுக்கு ஆடும் வாய்ப்பு, கிளாமர் ரோல் என ரூட் மாறி பின்னர் எந்த வாய்ப்புகளும் இல்லாமலேயே போனது.

Also Read: கிரண் ராத்தோட்டின் மட்டமான செயல்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல

நமீதா: நமீதா கோலிவுட்டிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர். மெல்லிய தேகம், வசீகரமான முகம் என சரத்குமாரின் ஏய் படத்தில் இருந்த நமீதா, குறுகிய காலத்திலேயே அதிக எடை ஏறி விட்டார். அதன் பின்னர் நமீதாவுக்கு கிளாமர் ரோல் பண்ணும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.

லட்சுமி மேனன்: சசிகுமாரின் சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் 80ஸ் ஹீரோயின்களின் முக சாயலை கொண்டு அறிமுகமானவர் தான் லட்சுமி மேனன். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த லட்சுமி மேனன் இளைஞர்களின் மனதில் கனவுக்கன்னியாக இருந்தார். சில வருடங்களிலேயே உடல் எடை கூடி படவாய்ப்புகளை இழந்தார்.

Also Read: எப்படி இருந்த நமீதா, இப்படி ஆகிட்டாங்களே.. வருத்தப்பட வைக்கும் அவரது சினிமா கேரியர்

மும்தாஜ்: கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான மும்தாஜ் தன்னுடைய முதல் படத்திலேயே தாராள கவர்ச்சி காட்டியதால் கிளாமர் ஹீரோயின் ஆனார். ஆனால் அதிக வெயிட் போட்டதால் மும்தாஜுக்கு அந்த வாய்ப்புகளும் இல்லாமல் போனது.

சோனியா அகர்வால்: காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமான சோனியா அகர்வால் அடுத்தடுத்து 7 ஜி ரெயின்போ காலனி, கோவில் என வெற்றிப்படங்களை கொடுத்தார். தளபதி விஜயுடன் மதுர என்னும் படத்திலும் நடித்தார். அந்த படத்திலேயே உடல் எடை கூடினாற் போல தோற்றமளித்த சோனியாவுக்கு படவாய்ப்புகள் பெரிதும் இல்லாமல் போனது.

நித்யா மேனன்: நித்யா மேனன் தன்னுடைய சிறந்த நடிப்பினால் 80ஸ் நாயகி ரேவதியை நினைவுக்கு கொண்டு வந்தவர். ஓ.கே கண்மணி திரைப்பட சமயத்தில் சினிமா ரசிகர்களுக்கு நித்யா மீது மிகப்பெரிய கிரஷ் இருந்தது. நல்ல நடிப்பு திறமை இருந்தும் உடல் எடையினால் இவருக்கு படவாய்ப்புகள் அமைவதில்லை.

Also Read: 6 வருடத்திற்கு முன்பே மலையாள நடிகைகளை ஓரம்கட்டிய நித்யா மேனன்.. இவ்வளவு கவர்ச்சி தாங்காது தாயி!

- Advertisement -