ரஜினி சினிமாவில் வளர்த்து விட ஆசைப்பட்ட 5 நடிகர்கள்.. சிஷ்யனாகவே மாறிய சிவகார்த்திகேயன்

Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் எல்லா கலைஞர்களிடமும் ஒரே மாதிரி பழகக் கூடியவர். ஆனால் அவருக்கு என்று மனதிற்கு நெருக்கமான சில நடிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் இந்த ஏழு நடிகர்களை எப்படியாவது சினிமாவில் வளர்த்து விட்டு விட வேண்டுமென ரஜினி காந்த் முயற்சி செய்து இருக்கிறார். அந்த ஐந்து பேர் யார் என்று பார்க்கலாம்.

ரஜினி வளர்த்து விட ஆசைப்பட்ட ஐந்து நடிகர்கள்

விஜய் சேதுபதி: ரஜினி கிட்டதட்ட 30 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறார். அவர் பேட்ட இசை வெளியீட்டு விழாவின் போது விஜய் சேதுபதியை போன்று ஒரு சிறந்த கலைஞனை நான் பார்த்ததே இல்லை என்று ரஜினி சொல்லும் அளவிற்கு விஜய் சேதுபதியை அவருக்கு பிடித்து போய் விட்டது. அடுத்தடுத்து அவர் சினிமாவில் வளர வேண்டும் என்பது ரஜினியின் மிகப்பெரிய ஆசையாக இருக்கிறது.

சிவகார்த்திகேயன்: சிவகார்த்திகேயன் மூன்று படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் பொழுது ரஜினிக்கு அவரை ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. தனுஷ் மூலம் சிவகார்த்திகேயன் வளர்வதை பார்த்து ரஜினி ரொம்பவே சந்தோஷப்பட்டார். இன்று வரை சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு ஏதாவது ஒரு இடத்தில் அவர் உதவி கொண்டுதான் இருக்கிறார். கிட்டத்தட்ட ரஜினியின் சிஷ்யனாகவே இப்போது சிவா இருக்கிறார்.

அருள் தாஸ்: தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் குணச்சித்திர கேரக்டர்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருபவர்தான் அருள் தாஸ். நீர்ப்பறவை, தர்மதுரை, அழகர்சாமியின் குதிரை, சூது கவ்வும் போன்ற நிறைய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவர் காலா படத்தில் ரஜினியுடன் நடித்தார். அதிலிருந்து ரஜினிக்கு ரொம்பவும் பிடித்த நடிகராக மாறிவிட்டார்.

கலையரசன்: நடிகர் கலையரசன் அட்டகத்தி படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானார். மெட்ராஸ் படத்தில் இவர் நடித்த அன்பு கேரக்டர் தான் இன்று வரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. கலையரசன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து காலா படத்தில் நடித்திருந்தார். கலையரசனின் வளர்ச்சியை பார்ப்பதும் ரஜினியின் நீண்ட நாள் ஆசை

திலீப்: பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தன்னுடைய தம்பி திலீபனை வத்திக்குச்சி என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். வித்தியாசமான கதை களத்தில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. திலீபன் ரஜினிகாந்த் உடன் இணைந்து காலா படத்தில் நடித்திருந்தார்.