கவுண்டமணி கூட்டணியில் வெற்றியடைந்த 5 ஹீரோக்கள்.. செந்தில் மார்க்கெட்டை இறக்கிவிட்ட சத்யராஜ்

பெரும்பாலும் படங்களில் காமெடி டிராக் என்பது தனியாக இருக்கும். அல்லது ஹீரோக்களுடன் காமெடி நடிகர்கள் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால் கவுண்டமணியை பொருத்தவரையில் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஒருபடி மேலாக சொல்லவேண்டுமென்றால் பல ஹீரோக்களின் படங்கள் ஹிட்டாக கவுண்டமணியின் நகைச்சுவையும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அந்த வகையில் சுந்தர் சி இயக்கிய பெரும்பாலான படங்களில் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகள் அதிகம் இருக்கும். சொல்லப்போனால் படம் முழுவதும் இவரது காட்சிகள்தான் நிறைந்திருக்கும்.

அவ்வாறு கார்த்திக், கவுண்டமணி கூட்டணியில் வெளியான பல படங்கள் வெற்றி அடைந்தது. உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, உனக்காக எல்லாம் உனக்காக, சிஷ்யா போன்ற படங்கள் இவர்களது காம்போவில் வெளியானது. இதற்கு அடுத்தபடியாக நடிகர் ராமராஜன் படங்களில் கவுண்டமணி அசத்தியிருப்பார்.

அதற்கு எடுத்துக்காட்டாக கரகாட்டக்காரன் படம் ஒன்றே போதும். அதன் பின்பு சரத்குமார், கவுண்டமணி கூட்டணியில் நாட்டாமை, சமஸ்தானம், மகாபிரபு போன்ற படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும் பிரபு உடன் இணைந்த கவுண்டமணி நிறைய படங்களில் நடித்துள்ளார்.

பிரபுக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தால் சின்னத்தம்பி படத்தில் கவுண்டமணி அசத்தியிருந்தார். கடைசியாக சத்யராஜ், கவுண்டமணி கூட்டணியில் வெளியான அனைத்து படங்களுமே ஹிட் தான். ஏனென்றால் இரண்டு பேருமே நகைச்சுவையில் பட்டையைக் கிளப்ப கூடியவர்கள்.

இதனால் இவர்கள் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தனர். அந்த காலகட்டத்தில் கவுண்டமணி, செந்தில் இருவரும் சேர்ந்து காமெடி செய்து வந்த நிலையில் சத்யராஜ் படங்களில் கவுண்டமணி நடிக்க தொடங்கியதால் செந்திலின் மார்க்கெட் அப்போது இறங்கியது.