ரீ என்ட்ரியில் சோபிக்காத 5 நடிகர்கள்.. அரவிந்த்சாமி போல் முதல் படத்தோடு காணாமல் போன ஹீரோக்கள்

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் தங்களது முதல் படத்திலேயே  மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிடுகின்றனர். அதன் பின்னர் காலப்போக்கில் சினிமாவில் இருந்து விலகி விடுகின்றன. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் டாப் ஹீரோக்களின் படங்களில் ரி என்ட்ரி கொடுத்து கெத்து காட்டுகின்றனர். ஆனால் அவையும் சிறுது காலம் கூட நீடிக்காமல் வந்த வேகத்திலேயே காணாமல் போகின்றனர். அப்படியாக தனது ரீ என்ட்ரி கொடுத்த முதல் படத்தோடு காணாமல் போன 5 ஹீரோக்களை பற்றி இங்கு காணலாம்.

அரவிந்த்சாமி: தமிழில் ரோஜா திரைப்படத்தின் மூலம் காதல் நாயகனாக வலம் வந்த இவர் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். பம்பாய், இந்திரா போன்ற படங்களில் நடித்ததன் மூலம்  ஏராளமான பெண் ரசிகைகளை கொண்டிருந்தார். அதன்பின் சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். கிட்டதட்ட 12 வருடங்களுக்குப் பிறகு கடல் திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். அதன்பின் தனி ஒருவன் படத்தில் மாஸ் என்ட்ரி ஆக சித்தார்த் அபிமன்யு என்னும் கதாபாத்திரத்தில் நடித்து புகழின் உச்சிக்கே சென்றார். இதனை அடுத்து சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்ற எதிர்பார்த்த நேரத்தில் ஒரு சில படங்களோடு காணாமல் போய்விட்டார்.

Also Read: வெளியில் தெரியாமல் வெச்சி செய்யும் அரவிந்த்சாமி.. அடேங்கப்பா பாஸ்கர் ஒரு ராஸ்கல் தான்

ரகுமான்: சினிமாவில் பலமொழி படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் தான் ரகுமான். பாலச்சந்தர் இயக்கத்தில் புதுப்புது அர்த்தங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சங்கமம், ராம், வாமணன் போன்ற படங்களில் நடித்திருந்தார். அதன்பின் ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காததால் சிங்கம் 2, பில்லா போன்ற படங்களில் வில்லன் ரோலில் மாஸ் காட்டி இருந்தார். ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக ரிஎன்ட்ரி கொடுத்தார். தற்பொழுது சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

மாதவன்: அலைபாயுதே படத்தின் மூலம் சாக்லேட் பாயாக பரீட்சியமானவர்தான் மாதவன். அதன்பின் மின்னலே, டும் டும் டும், ரன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து யாவரும் நலம், மன்மதன் அன்பு போன்ற படங்களின் மூலம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த இவர் பின்பு எங்கு போனார் என்று கூட தெரியவில்லை. சில வருடங்கள் கழித்து இறுதி சுற்று படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதனை அடுத்து விக்ரம் வேதா, ராகெட்ரி நம்பி விளைவு போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தற்பொழுது தனது படங்களில் ஹிட் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.

Also Read: முரட்டுத்தனமாய் மாறிய 5 சாக்லேட் ஹீரோக்கள்.. மாதவனை கொடூரனாய் மாற்றிய மணிரத்தினம்

ஷாம்: தமிழில் குஷி படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் 12 பி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதனை அடுத்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, பாலா, லேசா லேசா, இயற்கை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பெண் ரசிகர்களின் மத்தியில் ஃபேவரட் ஹீரோவாக வலம் வந்தார். அதன்பின் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்திருந்தார். இதனை அடுத்து தற்பொழுது  இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

பரத்: சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் பரத். இதனைத் தொடர்ந்து செல்லமே, காதல், எம் மகன் போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். ஒரு கட்டத்தில் இவரின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. அதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சக்திவேல் இயக்கத்தில் வெளியான மிரள் என்னும் ஹாரர்  படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் இவர் நடிப்பில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படங்கள் வெளியாகவில்லை என்றே சொல்லலாம்.

Also Read: 2 சூப்பர் ஹிட் படங்களை மிஸ் பண்ணிய பரத்.. இன்றுவரை நொந்து நூடுல்ஸ் ஆகி விடும் கண்ணீர்

Next Story

- Advertisement -