பொண்டாட்டி தொல்லை தாங்காம கழட்டி விட்ட 5 நடிகர்கள்.. இளம் நடிகையுடன் சர்ச்சையில் சிக்கிய பார்த்திபன்

பொதுவாக நடிகர்களில் சிலர் சினிமாவில் ஜெயித்தாலும் அவர்களுடைய சொந்த வாழ்வில் கொஞ்சம் தடுமாறத்தான் செய்கிறார்கள். நிறைய ஹீரோக்கள் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கூட வாழ்கிறார்கள். ஆனால் அது போன்ற ஹீரோக்களுக்கு கொஞ்சம் ஃபேமிலி ஆடியன்ஸ் கிடைப்பது கஷ்டம் தான். ஒரு பக்கம் விவாகரத்து என்றாலும் மறுபக்கம் இவர்களைப் பற்றிய கிசுகிசுகளும் வந்து கொண்டு தான் இருக்கும்.

கமல்: உலகநாயகன் கமலஹாசனை அன்றிலிருந்து இன்று வரை காதல் மன்னன் என்று சொல்லி அழைப்பதுண்டு. இவர் பரதநாட்டிய நடன ஆசிரியர் வாணியை திருமணம் செய்து விவாகரத்து செய்தார். அதன்பின்னர் பாலிவுட் நடிகை சரிதாவை திருமணம் செய்து விவாகரத்து செய்தார். பின்னர் நடிகை கௌதமியுடன் திருமணம் செய்யாமல் சில ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். இதற்கு இடையில் நடிகைகள் பலருடன் இவர் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார்.

Also Read: கஜானாவை திறக்காமலே படத்தை தயாரிக்கும் கமல்.. ராஜதந்திரியாக மாறிய உலக நாயகன்

தனுஷ்: நடிகர் தனுஷ் சினிமாவுக்கு வந்த புதிதில் இவருடன் நடிகைகள் நடிக்கவே யோசித்த காலம் உண்டு. அதன் பின்னர் ஒரு காலகட்டத்தில் இவருடன் நடிக்கும் நிறைய நடிகைகளுடன் இவர் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார். மேலும் பிரபல நடிகை அமலாபாலின் விவாகரத்துக்கு காரணமே இவர்தான் என்று செய்திகள் வெளியாகின. இறுதியில் கடந்த ஆண்டு இவர் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.

சித்தார்த்: நடிகர் சித்தார்த் விவாகரத்துக்கு பிறகு இன்றுவரை தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார் என்றாலும் இவருடைய காதல் வலையில் சிக்கியது அனைத்துமே முன்னணி நடிகைகள் தான். நடிகை சமந்தாவுடன் இவருடைய காதல் திருமணம் வரை சென்று பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பிறகு இவரும் நடிகை ஸ்ருதிஹாசனும் கூட காதலித்து வந்தனர். தற்போது இவர் நடிகை அதிதி ராவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Also Read:தலைக்கு ஏரிய மம்மதை.. சூப்பர் ஹிட் கொடுத்த புகழ் போதையில் ஹெட் வெயிட் காட்டும் தனுஷ் பட இயக்குனர்

ராமராஜன்: ராமராஜன் மற்றும் நடிகை நளினி இருவரும் ஒருமனதாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அதன் பின்னர் ராமராஜன் நடித்த ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகையுடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து நளினி அவரிடமிருந்து விவாகரத்தும் பெற்று விட்டார். ஆனால் இன்று வரை நடிகை நளினி எந்த ஒரு பேட்டியிலும் தான் இன்னும் தன் கணவரை அதிகமாக காதலிப்பதாக வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். ஆனால் ராமராஜன் அந்த அளவுக்கு நளினியை பற்றி எதுவும் பேசியது இல்லை.

பார்த்திபன்: பார்த்திபன் மற்றும் நடிகை சீதா இருவரும் புதிய பாதை திரைப்படத்தில் ஒன்றாக நடித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மூன்று பிள்ளைகள் இருக்கும் நிலையில் இவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்த இளம் நடிகையான பிரகிடவுடன் இவர் அதிக அளவு கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருப்பதாக கூட தகவல்கள் வெளியாகின.

Also Read: அவரைப் போல் வாழ்ந்தவரும் இல்லை, வீழ்ந்தவரும் இல்லை.. சூப்பர் ஸ்டார் வாழ்க்கையை படமாக்கும் பார்த்திபன்

Next Story

- Advertisement -