மோசமான மனநிலை, பெரும் முதலாளிகளை ஒதுக்கிய 5 ஹீரோக்கள்.. வெங்கட் பிரபுவிடம் வேணாம்னு சொன்ன விஜய்!

5 heroes are avoided by the producers of their Bad Attitude: தளபதி கூறுவது போல் வாழ்க்கை ஒரு வட்டம் கீழே இருப்பவன் மேலே செல்வதும் மேலே இருப்பவன் கீழே வருவதும் இயற்கை தான். 

ஆனால் திரைத்துறையில் பெரும்பாலான நடிகர்கள் ஒரு சில படங்கள்  ஹிட்டான உடன் புகழ் போதை தலைக்கேறி, சில தரமற்ற வேலைகளை தரமாக செய்து தயாரிப்பாளர்களின் வெறுப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அவ்வாறு மோசமான ஆட்டிடியூடால் தனக்கு வரும் வாய்ப்புகளை இழந்த 5 நடிகர்களை காணலாம்.

விமல்: கில்லி முதலான படங்களின் மூலம் சிறு சிறு வேடங்களை ஏற்று பசங்க மற்றும் களவாணி படத்தின் மூலம் தனது திறமையை நிரூபித்த விமல், புகழின் உச்சியில் இருக்கும் போது, தனது தவறான பழக்க வழக்கங்களினால் தயாரிப்பாளரின் கோபப்பார்வைக்கு ஆளானார். பின்பு அதிலிருந்து மீண்டு வந்த  இவர் தற்போது “போகும் இடம் வெகு தூரம் இல்லை” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதர்வா: நடிகர் முரளியின் மகனாக அறியப்பட்ட அதர்வா, பாணா காத்தாடி,  பரதேசி போன்ற படங்கள் மூலம் கவனம் ஈர்த்தாலும், திரை துறையில் இவர் ஒரு ஜாலியான பேர்வழி, டேட்டிங் மற்றும் மற்ற தவறான நடவடிக்கைகளால் பலரது கண்டனங்களுக்கும் ஆளாகி வருகிறார்.

சமீபத்தில் தயாரிப்பாளர் மதியழகன், இவரை சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.  முரளியின் பெயரைக் கொண்டு ஏமாற்றி வருகிறார், அரசியல்வாதிகளை கொண்டு மிரட்டி வருகிறார் என்று இவர் மீது அடுக்கடுக்கான குற்றம் சாட்டி வருகிறார்.

ஜெய்: சுப்பிரமணியபுரம், சென்னை 28 போன்ற படங்களின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்ற ஜெய், ஒரு சில தயாரிப்பாளர்களுடன் நேரடியாகவே மோதினார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு சரியான நேரத்திற்கு வராமல் இழுத்தடிப்பது, படப்பிடிப்பில்  ஓவராக ஆட்டிட்யூட் காண்பிப்பது என  இவர் மீது பல வகையான குற்றச்சாட்டுகள் உள்ளது. அதுமட்டுமின்றி  குடி போதையுடன் கார் ஓட்டி, காவல்துறையினருடன் மல்லு கட்டிய வீடியோவும் வைரல் ஆகியது.

பாபி சிம்ஹா: ஜிகர்தண்டா, நேரம், சூது கவ்வும் போன்ற படங்களின் மூலம் பரவலாக அறியப்பட்ட பாபி சிம்ஹா, சில நேரங்களில் படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய ஓவர் ஆட்டிடியூடால் பலரையும் முகம் சுளிக்க வைத்து விடுவாராம். இதனாலேயே தயாரிப்பாளர்கள் இவருக்கு வாய்ப்பு தர மறுப்பதாக தகவல்.

வைபவ்: வெங்கட் பிரபுவின் படங்களில் வைபவ்விற்கு தனி கதாபாத்திரம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. சரோஜா, மேயாத மான், மங்காத்தா போன்ற படங்களில் வைபவ்வின் கதாபாத்திரம் ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டது. 

இருந்த போதும், இவர் கோட் படத்தில் நடிப்பதற்கு விஜய் முதலில் மறுத்துள்ளாராம். வெங்கட் பிரபுவின் வேண்டுகோளின் பேரிலேயே  வைபவ்விற்கு கோட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.

 ஓவர் ஆட்டிடியூடால் புண்ணாகி போன நடிகர்கள் 

- Advertisement -