நயன்தாராவின் மார்க்கெட்டை காலி செய்த 5 படங்கள்.. சூப்பர்ஸ்டார் ஜோடி என்ற பெயரில் மொக்கை வாங்கிய படம்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி கொடுத்த நிலையில், அதற்கு முன்பாக நயன்தாராவாக மட்டும் இருந்த போது கிடைக்கும் படங்களிலெல்லாம் நடித்து வந்தார். அப்படி நடித்த பல படங்கள் நயன்தாராவுக்கு பிடிக்காத படங்களாம் . அப்படிப்பட்ட 5 படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

கஜினி: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்,சூர்யா ,அசின் உள்ளிட்டோர் நடித்த இப்படத்தில் நயன்தாரா செகண்ட் ஹீரோயினாக வலம் வந்தார். நயன்தாராவுக்கு சொன்ன கதை வேறு, படம் எடுக்கும்போது வேறு கதை என ஏ.ஆர்.முருகதாஸை நயன்தாரா நேரடியாகவே விமர்சித்தார். படத்தின் முக்கால்வாசி காட்சியில் நயன்தாரா இடம்பெற்றாலும் அசினின் நடிப்புக்கு தான் ரசிகர்கள் அசந்துபோனார்கள்.

Also Read: 3 ஹீரோயின்களை ரிஜெக்ட் செய்த விக்னேஷ் சிவன்.. நயன்தாரா மார்க்கெட்டை பிடிக்க செய்யும் நரித் தந்திரம்

தலைமகன்: 2006 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரின் 100 வது படமான இப்படத்தில் நயன்தாரா ஐயா படத்திற்கு பின் ஜோடியாக நடித்திருப்பார். ஐயா படத்தில் தொட்டுகூட பேசாத காட்சிகள் இருந்தது, ஆனால் அதற்கு மாறாக கவர்ச்சிப் பொங்க சரத்குமாருடன் ஆடிய நடனத்தை பார்க்கவே திரையரங்கில் கூட்டம் கூடியது எனலாம். இப்படி ஒரு படத்தின் கதையை நயன்தாரா எப்படி நடித்தார் என தற்போது அவரது ரசிகர்கள் கேள்விக் கேட்கும் அளவிற்கு இப்படம் தோல்விப்படமாக அமைந்தது.

நண்பேன்டா: உதயநிதி ஸ்டாலின், சந்தானம் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படத்தில் நயன்தாரா இரண்டாவது முறையாக உதயநிதியுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா, உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா என வைரமுத்து எழுதிய பாடல் வரிக்காகவே இப்படத்தை பார்க்க ரசிகர்கள் கூடினர். ஆனால் படத்தில் கதையே இல்லாமல் படம் சொதப்பலான தோல்வியை கொடுத்தது. இப்படத்திற்கு பின்னர் நயன்தாரா உதயநிதி பக்கமே போகவில்லை எனபது தான் உண்மை.

Also Read:3 வருடம் நயன்தாராவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நடிகர்.. இப்ப ரெண்டு பேருக்கும் குழந்தை பிறந்தாச்சு

கொலையுதிர்காலம்: ஹாலிவுட் படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நயன்தாராவிற்கு காது கேட்காத,வாய் பேசமுடியாத பெண்ணாக நடித்திருப்பார். ஒரு வீட்டில் தன்னை கொலை செய்ய வந்துள்ள கொலைக்காரனிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை. நயன்தாராவின் நடிப்பு பேசப்பட்டாலும், நயன்தாராவுக்கு ஏற்ற படமாக இல்லை என்ற பல விமர்சங்கள் வந்தது.

குசேலன்: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இப்படத்தில் மீனா, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். இப்படத்தில் உண்மையான சூப்பர்ஸ்டாராக நடித்த ரஜினியுடன் ,நயன்தாரா அவருடன் நடிக்கும் நடிகையாக வலம் வருவார். நயன்தாராவின் கிளாமர் காட்சியில் குறைவே இல்லை என்றாலும் படம் தோல்வியடைந்ததால் நயன்தாரா ஏண்டா இந்த படத்தில் நடித்தோம் என யோசித்தபடமாம்.

Also Read: 4 நடிகர்களை அசால்டாக கழட்டிவிட்ட நடிகை.. நயன்தாராவுக்கே டப் கொடுப்பாங்க போல

- Advertisement -