சிவகார்த்திகேயனை வேற லெவலில் உருவாக்கிய 5 படங்கள்.. 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்த டாக்டர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு முன்னேறிய நடிகர்களில் சிவகார்த்திகேயன் உச்சம்பெற்று, தற்போது முன்னணி நடிகராக கோலிவுட்டில் வலம் வருகிறார். இவரை வேற லெவல் உருவாக்கிவிட்ட 5 படங்கள் இன்றும் ரசிகர்களை ரசிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அதிலும் இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் போன்ற இரண்டு படங்களும் 100 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்து, பாக்ஸ் ஆபீஸ் நாயகனாகவும் மாறினார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்: 2013ல் பொன்ராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். சிவகார்த்திகேயன் நடிப்பில் நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற பாடலை சிவகார்த்திகேயன் பாடியிருப்பார்.

Also Read: 40 வயது இயக்குனரை வளைத்த சிவகார்த்திகேயன் பட நடிகை.. நடிகரின் அண்ணனுக்கு வீசிய வலை

இந்த படத்தின் வெற்றிக்கு அவருடைய பாடல்களும்  ஒரு காரணமாக அமைந்தது. இப்படம் 7 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 48 கோடி வசூல் சாதனை படைத்து அவருடைய அடுத்தடுத்த பட வாய்ப்பை பெற்று தந்தது.

வேலைக்காரன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1987 ஆம் ஆண்டு முத்துராமன் இயக்கிய வேலைக்காரன் என்ற நகைச்சுவை திரைப்படம் திரையரங்கில் 75 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்தது. இதே டைட்டிலை வைத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான வேலைக்காரன் 40 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டு வேற லெவல் ஹிட் கொடுத்தது.

Also Read: வில்லங்கமாக நடித்து பெயர் வாங்கிய 5 அப்பா கேரக்டர்கள்.. கண்ணீர் விட்டு கதறிய சிவகார்த்திகேயன்

நம்ம வீட்டு பிள்ளை: இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த இந்த திரைப்படம் ஃபேமிலி ஆடியன்ஸை மிகவும் கவர்ந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் காந்த கண்ணழகி என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. இந்தப் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பிடித்தமான நடிகராக அனைவரும் வீட்டின் செல்ல பிள்ளையாகவே மாறினார்.

டாக்டர்: 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன்- பிரியங்கா மோகன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, 100  கோடியை பாக்ஸ் ஆபிஸில் குவித்து வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் பல லாஜிக் மிஸ் ஆனாலும் காமெடியை மட்டும் வைத்து ரசிகர்களை ஈர்த்தது. இந்தப் படம் தான் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை எகிற வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ரஜினி பட டைட்டிலை வைத்து ஹிட் கொடுத்த 5 படங்கள்.. வேற லெவலில் இருந்த சிவகார்த்திகேயனின் வேலைக்காரன்

டான்: சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வருடம் மே மாதம் வெளியான டான் திரைப்படம் 100 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. அந்த வகையில் டாக்டர் படத்திற்குப் பின்பு சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவது மாபெரும் வெற்றியை டான் திரைப்படம் கொடுத்தது. இதன் பிறகு சிவகார்த்திகேயன் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி டாப் ஹீரோ லிஸ்டில் இடம் பெற்றார்.

இவ்வாறு சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது சினிமா பயணத்தை துவங்கிய சிவகார்த்திகேயன் ஒரு சில படங்களிலேயே ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகராக மாறியது மட்டுமல்லாமல் அவரை வேற லெவலில் இந்த 5 படங்களும் உருவாக்கியுள்ளது.

Next Story

- Advertisement -