சிம்பு மார்க்கெட்டை கெடுத்த 5 படங்கள்.. ட்ரைலரை வைத்து ஏமாற்றிய மொக்க படம்

சிம்பு குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமானதால் ஒரு பரிச்சியவான முகமாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். மேலும் தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் மன்மதனாக வலம் வந்த சிம்புக்கு அடுத்தடுத்து தோல்வி காரணமாக பெரிய அடி விழுந்தது. அவ்வாறு சிம்பு மார்க்கெட்டை இழக்க காரணமாக இருந்த 5 படங்களை தற்போது பார்க்கலாம்.

போடா போடி : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் போடா போடி. இப்படத்தின் மூலம் தான் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றாலும் படம் தோல்வியை சந்தித்தது.

Also Read :கமலஹாசன் போல் பல கெட்டப்பில் நடிக்கும் சிம்பு.. ஆஸ்கரை உறுதிசெய்யும் அடுத்த படம்

இது நம்ம ஆளு : பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, அண்ட்ரியா ஆகியோர் நடிப்பில் 2016 இல் வெளியான திரைப்படம் இது நம்ம ஆளு. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்ற நிலையில் படம் படுமோசமான தோல்வி அடைந்தது.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்த படத்தில் தமன்னா, ஸ்ரேயா சரண் மற்றும் பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் சிம்பு கெரியரில் படுதோல்வியை சந்தித்தது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சக்கை போடு போட்டது. இதைப்பார்த்து தியேட்டருக்கு மக்கள் படையெடுத்து ஏமாந்து விட்டனர்

Also Read :சிம்பு இயக்குனரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிவகார்த்திகேயன்.. அப்போ தரமான சம்பவம் இருக்கு

வந்தா ராஜாவாதான் வருவேன் : சுந்தர் சி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் வெளியான திரைப்படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இப்படத்தில் சிம்பு, கேத்தரின் தெரசா போன்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், பிரபு, நாசர், மஹத், யோகி பாபு என பலர் நடித்தும் படம் தோல்வி அடைந்தது.

ஈஸ்வரன் : சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இப்படத்தில் சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா, நந்திதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை பெரிதும் நம்பியிருந்த சிம்புக்கு தோல்வியை தான் தந்தது.

மேலும் தொடர் தோல்வியை தந்து வந்த சிம்புக்கு மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு படமும் அமோக வரவேற்பை பெற்றது. இவ்வாறு சிம்பு தொடர்ந்து மீண்டும் தனது மார்க்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

Also Read :தேசிய விருது நடிகையுடன் ஜோடி போடும் சிம்பு.. மாஸானா இயக்குனருடன் கூட்டணி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்