சமீபத்தில் தியேட்டரை மிரள வைத்த 5 படங்கள்.. பல பேர் மறந்த பரத்திற்கு மறுவாழ்வு கொடுத்த படம்.!

தமிழ் சினிமாவில் 2022 ஆம் ஆண்டின் முன்னணி நடிகர்களான அஜித்தின் வலிமை, விஜயின், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் ரிலீசான நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் தந்தது. இதனிடையே அண்மைக்காலமாக ரிலீசான கம்மி பட்ஜெட் திரைப்படங்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் சக்கை போடு போட்டு ஹிட்டானது. அப்படிப்பட்ட ஐந்து சூப்பர்ஹிட் திரைப்படங்களை தற்போது பார்க்கலாம்.

பரோல் : இயக்குனர் த்வராகராஜ் இயக்கத்தில் இந்த வருடம் நவம்பர் மாதம் ரிலீசான பரோல் திரைப்படம் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக அமைந்திருந்தது. கல்பிக்க கணேஷ், ஆர்.எஸ் கார்த்திக், லிங்கா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இத்திரைப்படத்திற்கு விஜய் சேதுபதி கதை எழுதியிருந்தார். இப்படத்தின் ட்ரைலரில் விஜய்சேதுபதியின் குரலில் கதை சொல்லும் வகையில் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : 6 பெரும் முதலைகளை ஓரங்கட்டிய பிரதீப் ரங்கநாதன்.. முதல் பந்திலேயே அடித்த இமாலய சிக்சர்

மிரள் : நடிகர் பரத், வாணி போஜன், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோரின் நடிப்பில் இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் வெளியான மிரள் திரைப்படம் ஹாரர், திரில்லர் படமாக வெளியானது. கதையில் விறுவிறுப்பும், வாணிபோஜனின் நடிப்பும் இத்திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் வெற்றி பெற்றது. மேலும் நடிகர் பரத்திற்கு ரீ-என்ட்ரி கொடுத்த திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

லவ் டுடே : நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இரண்டாவதாக இயக்கி ஹீரோவாக அறிமுகமாகி நடித்த திரைப்படம் தான் லவ் டுடே, கோமாளி திரைப்படம் எந்த அளவிற்கு ஹிட்டானதோ அதற்கு ஒரு படி மேலாகவே லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. காதல், குடும்பம், சென்டிமெண்ட், யுவனின் இசை என இத்திரைப்படத்தில் அனைத்துமே படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.

Also Read : திருமணமான நடிகருடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. நைட் பார்ட்டியில் அடிக்கும் கூத்து

டிரைவர் ஜமுனா : ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான டிரைவர் ஜமுனா திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பிற்கு அடுத்த ஒரு படி எனலாம். படம் முழுவதும் காரிலேயே படத்தின் கதைகள் நடக்கும் வகையில் இயக்குனர் கிங்ஸ்லி இயக்கி உள்ளார் இத்திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் எப்போது என்ன நடக்கும் என யூகிக்க முடியாத படி திரில்லிங்காக அமைந்துள்ளது.

யசோதா : நடிகை சமந்தா நடிப்பில் இந்த வருடம் இரண்டாவது திரைப்படமாக யசோதா திரைப்படம் ரிலீஸானது. பணத்திற்காக வாடகைத் தாயாக மாறும் சமந்தா அதன்பின் அவருக்கு நேர்ந்த சவால்களை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை. கர்ப்பிணியாக நடித்த சமந்தா செய்யும் சண்டை காட்சிகள் சமந்தாவை ஆக்ஷன் ஹீரோயினாக இத்திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Also Read : நோயின் அவஸ்தையால் சமந்தாவிடமிருந்து பறிபோகும் பட வாய்ப்பு.. சத்தம் இல்லாமல் தட்டி தூக்கிய அம்மா நடிகை

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -