லோகேஷ் ரீமேக் செய்ய ஆசைப்படும் 5 படங்கள்.. 3 கமல் படங்களை குறி வைத்து போடும் திட்டம்

ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கினாலும் எடுக்குற படம் எல்லாம் சூப்பர் ஹிட் ஆனதால்,  டாப் நடிகர்கள் இணைய விரும்பும் இளம் இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் ரீமேக் செய்ய ஆசைப்படும் 5 படங்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது. அதில் பெரும்பாலும் கமல் படத்தை தான் குறிவைத்து பெரிய திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

ஊமை விழிகள்: அரவிந்த் ராஜ் இயக்கத்தில் விஜயகாந்த், கார்த்திக், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான திரில்லர் திரைப்படம் தான் ஊமை விழிகள். இந்த படத்தில் இளம் பெண்கள் பலர் மர்மமான முறையில் காணாமல் போகிறார்கள். இதைப் பற்றி துப்பு துலக்கி அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக தீன தயாளன் என்ற கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்து பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவார். இந்த படம் லோகேஷுக்கு மிகவும் பிடித்தமான படம் என்பதால், இதை ரீமேக் செய்யும் ஐடியாவில் இருக்கிறார்.

நாயகன்: கமல்- லோகேஷ் கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் படத்தில் கூட ‘நாயகன் மீண்டும் வருவான்’ என்ற பாடல் வரிகளை இடம்பெறச் செய்து நாயகன் படத்தில் நடித்த கமலை கண் குளிர பார்த்துக் கொண்டார். அந்த அளவிற்கு நாயகன் படம் லோகேஷுக்கு மிகவும் இஷ்டம். இந்த படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்றும் திட்டம் போட்டு இருக்கிறார்.

Also Read: தீபிகா படுகோனாவால் வாயடைத்துப் போன கமல்.. இருக்கிறதை விட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கெதி

தேவர் மகன்: 5 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்பது கமலின் விருப்பம். ஆனால் வெறும் 7 நாளில் கமலஹாசன் திரைக்கதை எழுதிய தேவர் மகன் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்பது லோகேஷின் கனவு. இந்தப் படத்தில் சிவாஜி- கமல் காம்போ பக்காவாக ஒர்க் அவுட் ஆகி இருக்கும், அதேபோன்று சிவாஜி கேரக்டரில் கமலையும் கமல் கேரக்டரில் தற்போது இருக்கும் இளம் ஹீரோக்கள் யாரையாவது கூட்டு சேர்ந்து நிச்சயம் இந்த படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் லோகேஷ் இருக்கிறார்.

பருத்திவீரன்: கார்த்தி கரடு முரடான ஹீரோவாக பருத்திவீரன் என்ற கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இந்தப் படம் லோகேஷ் ரீமேக் செய்யும் படங்களின் லிஸ்டில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. பருத்திவீரன் படத்தைப் போன்று சாக்லேட் பாய் போல இருக்கும் நடிகர்களை பக்கா கிராமத்து ஹீரோவாக காட்டி, அதில் தூய்மையான காதலை வெளிப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தில் லோகேஷ் இருக்கிறார்.

Also Read: தயாரிப்பாளராக கெத்து காட்டும் கமல்.. 500 கோடி பட்ஜெட், 3 ஹீரோக்களால் அரண்டு போன லைக்கா

உன்னைப்போல் ஒருவன்: கமலஹாசன்- மோகன்லால் காம்போவில் 2009 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் ‘எ வென்னஸ்டே’ என்ற ஹிந்தி படத்தின் தழுவல் தான். ஆனால் இதில் சென்னை காவல்துறை அலுவலருக்கு மர்ம நபராக கமல் போன் செய்து, நகரத்தில் 5 இடங்களில் குண்டு வைத்திருப்பதாகவும், அதற்கு பதில் 4 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் இல்லையென்றால், குண்டு வெடிக்கும் எனக் கூறுகிறார். அதன் பிறகு தீவிரவாதிகள் விமான நிலையத்தில் விடுவிக்கப்படுகிறார்கள். இதன் பின் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களும் அதற்கான காரணங்களும் தான் படத்தின் முடிவு. இந்த படத்தையும் லோகேஷ் ரீமேக் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார்.

இவ்வாறு இந்த ஐந்து படங்கள் தான் லோகேஷ் ரீமேக் செய்ய ஆசைப்பட்டுள்ள படங்களாகும். அதிலும் கமலின் நாயகன், தேவர் மகன், உன்னைப்போல் ஒருவன் போன்ற 3 படங்களையும் குறி வைத்து பல திட்டங்களை தீட்டி உள்ளார்.

Also Read: நடிப்பு அரக்கன் பசுபதி ரசிகர்கள் மனதை வென்ற 6 படங்கள்.. கமலுக்கு நிகராக நடித்த ‘கொத்தாள தேவர்’

Sharing Is Caring:

அதிகம் படித்தவை