சிவகார்த்திகேயனை பிரச்சனையில் இழுத்து விட்ட 5 படங்கள்.. 100 கோடி வசூல் பெற்றும் தீராத கடன்

இன்று தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்கள் பட்டியலில் இடம்பெற்று வரும் சிவகார்த்திகேயன் தன் ஆரம்ப காலத்தில் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். இவர் தற்பொழுது தன்னுடைய அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். இருப்பினும் இன்று வரை இவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி இங்கு காணலாம்.

ஒரு தொகுப்பாளராக தன் பயணத்தை ஆரம்பித்து சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் தான் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சில படங்கள் கை கொடுக்காத நிலையில் அதன் பின் இவர் நடிப்பில் வெளிவந்த ரஜினிமுருகன் இவருக்கு கமர்சியல் ஹிட் கொடுத்தது.

Also Read: சந்தானத்தை வைத்து படம் எடுத்த நீலி நடிகை.. சம்பாதித்த மொத்த பணத்தையும் இழந்த பரிதாபம்

இதை தொடர்ந்து 2016ல் ஆ டி ராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ரெமோ. சிவகார்த்திகேயனுக்கு இப்படம் நல்ல விமர்சனத்தை கொடுத்திருந்தாலும், தயாரிப்பாளர் தரப்பில் சுமார் 50 கோடி வசூலை மட்டுமே பெற்று தந்தது.
அதன்பின் 2018ல் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சீமராஜா.

இப்படத்தையும் ஆர் டி ராஜா இவரை நம்பி படத்தை அதிக பட்ஜெட்டில் கொண்டு போனதன் விளைவாகவும் மேலும் இப்படம் பெரிதளவு
பேசப்படாததாலும் பயங்கர நஷ்டத்தை எதிர்கொண்டார் சிவகார்த்திகேயன். இத்தகைய நஷ்டத்தில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு அடுத்த அடியாக 2019ல் மிஸ்டர் லோக்கல் படமும் கை கொடுக்காமல் எதிர்மறை விமர்சனத்தை பெற்று தோல்வியை தழுவியது.

Also Read: 85% பட்ஜெட்டை முன்கூட்டியே வாரி சுருட்டிய ஆதி புருஷ்.. மிரள வைக்கும் ப்ரீ பிசினஸ் ரிப்போர்ட்

பைனான்சியரால் போடப்பட்ட நெருக்கடியால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் சிவகார்த்திகேயன். தொடர் தோல்வியால் மார்க்கெட்டை இழந்து காணப்பட்ட சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் படம் ரிலீசின் போதும் பிரச்சனை ஏற்பட்டது.

மேலும் இப்படம் நூறு கோடி வசூலை பெற்று தந்தும் அவரின் கடன் பிரச்சனை தீரவில்லை. அதன்பின் அயலான் படமும் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்டு தற்பொழுது அதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு காத்திருக்கின்றது. ஆனாலும் இதுவரை இவரின் பண பிரச்சனை முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அட்டைப்பூச்சி போல ஒட்டிக்கொண்டே திரியும் யாஷிகா.. காதல் மயக்கத்தில் இருக்கும் அஜித் மச்சானின் புகைப்படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்