அர்ஜுனை தூக்கி நிறுத்திய 5 வெற்றி படங்கள்.. கீழே விழும் நேரத்தில் தாங்கிப் பிடித்த ஷங்கர்

சண்டைக் காட்சிகளுக்கு பெயர் போனவர் ஆக்சன் கிங் அர்ஜுன் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். முதலில் இவர் ஜெய்ஹிந்த், செங்கோட்டை, தாயின் மணிக்கொடி, சேவகன் போன்ற போலீஸ் கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கும் சினிமாவில் ஒரு வெற்றிடம் உண்டானது. வேறு நல்ல இயக்குனர்களை தேடி கொண்டிருக்கும்போது ஷங்கரின் ஜென்டில்மேன் இவருக்கு கேரியரில் ஒரு திருப்பத்தை காட்டியது

ஜென்டில்மேன்: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் திரைப்படம் அர்ஜுனுடைய வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஜென்டில்மேன் திரைப்படம் இயக்குனர் ஷங்கருக்கு முதல் படம். இப்படத்தில் அர்ஜுன் உடன் மதுபாலா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இதில் ஆக்சன் கிங் அர்ஜுனின் வித்தியாசமான நடிப்பு வெளிப்பட்டது ரசிகர்களை மேலும் கவர்ந்தது. இதுவரை வந்த இந்திய திரைப்படங்களிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை ஜென்டில்மேன் பெற்றது.

Also Read: அதிரிபுதிரியாக ரெடியாகும் மங்காத்தா பார்ட்-2.. அஜித்துடன் சர்ப்ரைஸ் புகைப்படம் வெளியிட்ட ஆக்ஷன் கிங்

முதல்வன்: 1999 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த முதல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகும். இப்படத்தில் அர்ஜுனுடன் மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், வடிவேலு, மணிவண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ஷங்கர் பல புதிய புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வித்திட்டிருப்பார். அதன் காரணமாகவே இந்த படம் 2000ம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளது.

ரிதம்: இயக்குனர் வசந்த் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் அர்ஜுன், ஜோதிகா, மீனா, நாகேஷ், லட்சுமி, ரமேஷ் அரவிந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் இப்படத்தில் ஜோதிகா மற்றும் மீனாவுடன் இணைந்து தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருப்பார். ரிதம் படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. இந்தப் படத்தில் அர்ஜுன் மிக எதார்த்தமாக தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி அவருடைய திரை வாழ்க்கையின் வெற்றியை சுவைத்தார்.

Also Read: மகளுடன் நடிக்க மறுத்ததால் பிரஸ் மீட் வைத்து அவமானப்படுத்திய அர்ஜுன்.. டென்ஷனாகி பதிலடி கொடுத்து நடிகர்

ஏழுமலை: 2002ல் வெளிவந்த இப்படத்தில் அர்ஜுன் நடித்து இயக்கிய திரைப்படங்களில் ஒன்று. இத்திரைப்படத்தில் அர்ஜுன், சிம்ரன், மும்தாஜ், விஜயகுமார் போன்றோர் நடித்துள்ளனர்.மணிசர்மா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மங்காத்தா: 2011ல் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக அர்ஜுன் நடித்திருப்பார். இப்படத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், அஞ்சலி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அனைத்து படங்களிலும் கதாநாயகனாக நடித்து அசத்திய அர்ஜுன் மங்காத்தா படத்தில் அஜீத்துக்கு வில்லனாக நடித்து தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: 100 கோடி கொடுத்தாலும் அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன்.. உச்சகட்ட கோபத்தில் அர்ஜுன் நடத்திய பிரஸ்மீட்

இவ்வாறு இந்த 5 படங்களும் அர்ஜுனை நடிகராக நிலை நிறுத்திய படங்களாகும் அதிலும் ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன், முதல்வன் போன்ற படங்கள் அர்ஜுன் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களாக அமைந்தது.