காதலில் ஒன்று சேராமல் போன 5 படங்கள்.. பிரித்துப் பார்த்து ஆனந்தப்பட்ட கௌதம் மேனன்

Love Failure Movie: கௌதம் மேனன் இயக்கிய படங்கள் என்றால் காதலுக்கு பஞ்சமே இருக்காது. எதிர்பார்க்க முடியாத அளவிற்கு காதல் உணர்வுகளை ஒரே படத்தில் காமிக்க முடியும் என்றால் அது இவரால் மட்டும் தான் முடியும். அப்படிப்பட்ட இவர் இயக்கிய சில படங்களில் காதலித்தவர்கள் ஒன்று சேர முடியாத அளவிற்கு கதையை கொண்டு போய் முடித்து இருப்பார். அந்த மாதிரியான படங்களை பற்றி பார்க்கலாம்.

காக்க காக்க: கௌதம் மேனன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு காக்க காக்க திரைப்படம் வெளிவந்தது. இதில் சூர்யா, ஜோதிகா, ஜீவன், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சூர்யா ஜோதிகா இருவரும் மனதார காதலித்து கல்யாண வாழ்க்கையில் சேர வேண்டும் என்ற ஆசையுடன் திருமணம் செய்து கொள்வார்கள். அதன் பிறகு வில்லன்களால் ஜோதிகா இறந்து விடுவார். கடைசியில் காதலித்த ஜோதிகா உடன் சேர முடியாமல் சூர்யா வெறிகொண்டு வில்லன்களை பழிவாங்குவதாக கதை முடியும்.

Also read: விருப்பம் இல்லாமல் அசின் ரிஜெக்ட் செய்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. சூர்யாவுடன் நடிக்க மறுத்த காரணம்

வேட்டையாடு விளையாடு: கௌதம் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வேட்டையாடு விளையாடு திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல்,கமலினி முகர்ஜி, ஜோதிகா, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கமல் மற்றும் கமலினி முகர்ஜி இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள். இதனை தொடர்ந்து இவர்கள் வாழ்க்கை சந்தோசமாக நடத்தி வரும் போது கமலின் எதிரிகளாக இருக்கும் வில்லன்கள் இவருடைய மனைவியை தாக்கியதால் அவர் இறந்து விடுவார்.

வாரணம் ஆயிரம்: கௌதம் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வாரணம் ஆயிரம் திரைப்படம் வெளிவந்தது. இதில் சூர்யா, சமீரா ரெட்டி, சிம்ரன், திவ்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சூர்யா அளவு கடந்த காதலை சமீரா ரெட்டி மேல் வைத்து அவரை கரம் பிடிக்க வேண்டும் என்று நினைப்பார். அதன்பின் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சேரலாம் என்று நினைக்கும் பொழுது விபத்தினால் அவர் இறந்து விடுகிறார். கடைசியில் காதலித்துருடன் சேர முடியாமல் வேறொரு திருமணத்தை செய்து கொள்வார்.

Also read: சூர்யா கூட நடிக்க மாட்டேன்னு மறுத்த நடிகை.. அந்த ரோலே வேண்டாம் என நிராகரித்த கியூட் ஹீரோயின்

விண்ணைத்தாண்டி வருவாயா: கௌதம் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வெளிவந்தது. இதில் சிம்பு, திரிஷா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் அழகான காதல் கதையை சொல்லி பார்ப்பவர்களை சொக்க வைக்கும் அளவிற்கு கதையை அமைத்திருப்பார். ஆனால் சிம்பு மற்றும் த்ரிஷாவின் காதல் கடைசியில் ஒன்று சேராமல் போய்விடும். திரிஷா வேற ஒருவரை திருமணம் செய்து கொள்வார். சிம்பு இவரை நினைத்து தனியாக இருப்பார்.

என்னை அறிந்தால்: கௌதம் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், திரிஷா, அனுஷ்கா மற்றும் அருண் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அஜித் திரிஷாவை கல்யாணம் பண்ண வேண்டும் என்று நினைக்கும் தருணத்தில் வில்லன்களால் சுட்டுக் கொல்லப்பட்டுவார். கடைசியில் நினைத்தபடி த்ரிஷாவுடன் வாழ முடியாமல் ஆகிவிடும்.

Also read: பிஞ்சிலேயே பழுக்க வைக்கப்பட்டு கேரியரை தொலைக்கும் 6 நடிகைகள் .. கிளாமரில் முகம் சுளிக்க வைத்த அஜித்தின் ரீல் மகள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்