வயிறு குலுங்க சிரிக்க வைத்த ரஜினியின் 5 காமெடி படங்கள்.. மீசையை வைத்து தேங்காய்-வை படுத்திய பாடு

தென்னிந்திய சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது படங்களில் பல்வேறு கேரக்டரில் மாஸ் காட்டி நடித்திருப்பார். ஆனால் அதையும் தாண்டி இவர் தனது நகைச்சுவையான நடிப்பின் மூலம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார். அப்படியாக ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த 5 காமெடி படங்களை இங்கு காணலாம்.

வீரா: இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரா. இதில் ரஜினிகாந்த் உடன் மீனா, ரோஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் நகரத்தில் நடக்கும் பாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக கிராமத்தில் இருந்து வரும் ரஜினிகாந்த் ஒரு கட்டத்தில் செந்திலுடன்  நண்பராகி விடுவார். அதிலும் இப்படத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இருக்காது என்றே சொல்லலாம்.

Also Read: ரஜினி குடும்பத் தலைவன் கதாபாத்திரத்தில் நடித்த 5 படங்கள்.. 90களில் வானவராயனாய் பல பெண்களைக் கவர்ந்த தலைவர்

படிக்காதவன்: இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் படிக்காதவன். இதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், அம்பிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் ஜனகராஜ் உடன் இணைந்து ரஜினிகாந்த் தனது நகைச்சுவை கலந்த  நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

வேலைக்காரன்: இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ஆகும். இதில் ரஜினிகாந்த் உடன் சரத் பாபு, அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் முதலாளிக்கு ஒரு விசுவாசமான வேலைக்காரனாக நடித்திருப்பார். அது மட்டுமல்லாமல் படம் முழுவதிலும் தனது நக்கல் கலந்த பேச்சின் மூலம் நடித்து அசத்திருப்பார்.

Also Read: 90களில் நடிகர்கள் வாங்கிய சம்பள பட்டியல்.. உலக நாயகனை விட 3 மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கிய ரஜினி

ராஜாதி ராஜா: 1989 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர் சுந்தரராஜன் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் ராஜாதி ராஜா. இதில் ரஜினிகாந்த் உடன்  ராதா, நதியா, ராதா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அதிலும் இப்படத்தில் எதிர்மறையான கேரக்டரில் நடித்துள்ள ராதாரவிக்கு ரஜினிகாந்த் தனது நகைச்சுவையான மந்திரத்தின் மூலம் தண்ணி காட்டி இருப்பார்.

தில்லு முல்லு: இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தில்லு முல்லு. இதில் ரஜினிகாந்த் உடன் மாதவி, தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அதிலும் இப்படத்தில் ரஜினிகாந்த் தனது முதலாளியை ஏமாற்றும் விதமாக, மூக்குக்கு கீழே மீசை இருந்தால் அவன் இந்திரன் மீசை இல்லை என்றால் அவன் சந்திரன்.இப்படியாக தேங்காய் ஸ்ரீனிவாசனையே தனது நகைச்சுவையால் கிரங்கடித்து இருப்பார். 

Also Read: அஜித் கதையில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினி.. முடியாது எனக்கூறி மொக்கை வாங்கிய இயக்குனர்

- Advertisement -