175 நாளுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா கண்ட சிவகுமாரின் 5 படங்கள்.. இன்று வரை நிலைத்து நிற்கும் “தண்ணி தொட்டி” பாடல்

1970களில் ஹீரோவாக கலக்கிய  நடிகர்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்படுபவர் நடிகர் சிவகுமார். இவருடைய நடிப்பில் வெளியான5 படங்கள் 175 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கண்டது. அதிலும் இவருடைய தண்ணீர் தொட்டி பாடல் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.

அன்னக்கிளி: 1976 ஆம் ஆண்டு தேவராஜ் மோகன் இயக்கத்தில் சிவக்குமார், சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி உள்ளிட்டோத் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பார். இதில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகவும் பிரபலமானதுடன், கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த படம் வெள்ளி விழா கண்டது.

இந்த படத்தில் சுஜாதாவை காதலிக்கும் சிவக்குமார் சூழ்நிலைகள் காரணமாக, வேறொரு பெண்ணை மணக்கிறார். அதன் பிறகு சுஜாதாவை பற்றிய ஒரு தவறான புரிதலை கிராம மக்களிடையே உருவாகி விடும். அதன் பிறகு சுஜாதா தனது குற்றமற்றதை எவ்வாறு நிரூபிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

Also Read: சூர்யா செய்த தவறை நீ செய்யக்கூடாது.. கார்த்திக்கை எச்சரித்த சிவகுமார்

பத்ரகாளி: 1976 ஆம் ஆண்டு சிவக்குமார் நடிப்பில் வெளியான இந்த படம், எழுத்தாளர் மகரிஷி எழுதிய தமிழ் புதினம் ஒன்றை அடிப்படையாக வைத்து திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா விமான தீ விபத்தில் இறந்து போனதால், அந்த படத்தில் மீதம் இருக்கும் காட்சிகளை அவரைப் போன்றே இருந்த புஷ்பா என்ற துணை நடிகையை வைத்து படத்தின் இயக்குனர் ஏ.சி. திரலோகச்சந்தர் படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்து ஹிட் கொடுத்தார்.

ஆட்டுக்கார அலமேலு: 1977 ஆம் ஆண்டு ஆர் தியாகராஜன் இயக்கத்தில் சிவக்குமார், ஸ்ரீப்ரியா உடன் இணைந்து நடித்த இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் சிறுவயதிலிருந்து ஸ்ரீப்ரியா வளர்த்த ராமு என்ற ஆடு படத்தில் செம லூட்டி அடித்திருக்கும்.

அது மட்டும் இன்றி ஸ்ரீப்ரியாவிற்கு ஆபத்தை ஏற்படும்போது சிவக்குமாருடன் இணைந்து இந்த ஆடு படத்தில் பல சாகசங்களை செய்து காட்டியிருக்கும். சிவக்குமார் இந்த படத்தில் ஆக்சன் ஹீரோவாக தன்னை வேறு விதமாக வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: சிந்து பைரவி சுலக்ஷனா ஞாபகம் இருக்க.? 450 படங்கள் நடித்தும், திருமண வாழ்க்கையில் நடந்த சோகம்!

ரோசாப்பூ ரவிக்கைக்காரி: 1979 ஆம் ஆண்டில் தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சிவகுமார், தீபா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். படத்தை சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நாகரீகம் எட்டிப்பார்க்காத கிராமத்தில் வெற்றிலை விற்பனை செய்யும் கள்ளங் கபடமற்ற இளைஞர் செம்பட்டையாக சிவகுமார் இந்தப் படத்தில் அப்பாவியாக நடித்திருப்பார்.

இதில் செய்யாத குற்றத்திற்காக அவருடைய அறியாமையை வைத்தே ஊர் பஞ்சாயத்து தர்ம அடி கொடுத்து, பழி போட்டதால் மனமுடைந்து வீட்டிற்குள் சென்ற செம்பட்டை, தன்னுடைய மனைவி வேறொருவருடன் தொடர்பில் இருப்பதை பார்த்து உயிரை விடுகிறார்.

இந்தப்படத்தில் போலியான நாகரிகம் எப்படி கிராமத்தின் வாழ்க்கைமுறையை தடம் புரட்டிப் போட்டது என்பதை சிவக்குமார் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். சிவகுமாரின் 100வது படமான இந்தப் படம்தான் அவரின் நடிப்பிற்கு பேர் சொல்லும் படங்களில் முதலிடம் பிடித்தது.

Also Read: சிவக்குமார் நடிப்பில் மாபெரும் ஹிட்டான 4 படங்கள்.. மனுஷன் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துருக்காரு!

சிந்து பைரவி: 1985 ஆம் ஆண்டு கேளட் பாலச்சந்தர் இயக்கத்தில் சுகாசினி, சிவகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் சுஹாசினி, ஏற்கனவே திருமணம் ஆன பாடகராக இருக்கும் காதலன் சிவக்குமாரை ஏற்றுக் கொள்வாரா என்பதுதான் படத்தின் கதை. இப்படம் சிவகுமார் வாழ்க்கையில் மிக முக்கியமான படம்.

இந்தப்படம் 175 நாளுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா கண்டு ரசிகர்களிடம் அவருக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொடுத்தது. மேலும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்’ என்ற பாடல் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்காமல் நினைத்து நிற்கிறது.

இவ்வாறு இந்த 5 படங்களும் சிவக்குமாரின் நடிப்பில் வெளியாகி வெள்ளி விழா கண்ட படங்களாகும். இந்த படங்களின் மூலம் தான் தமிழ் சினிமாவில் சிவக்குமார் தனது இருப்பை ஆழமாக பதிவு செய்தார்.

- Advertisement -