விலங்குகளை ஹீரோவாக வைத்து எடுக்கப்பட்ட 5 படங்கள்.. விக்ரம் பிரபுவை தூக்கிவிட்ட கும்கி

kumki
kumki

தமிழ் சினிமாவில் சில படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரது கவனத்தையும் இருக்கும் விதமாக இருக்கும். அதிலும் விலங்குகளை வைத்து எடுக்கப்படும் படங்கள் ரசிகர்களுக்கு வெகுவாக பிடிக்கும். அவ்வாறு ஹீரோக்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை காட்டிலும் விலங்குகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வெற்றி கண்ட 5 படங்களை இப்போது பார்க்கலாம்.

நல்ல நேரம் : எம்ஜிஆர் 1972இல் நடித்த வெளியான திரைப்படம் நல்ல நேரம். இந்த படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக கே ஆர் விஜயா நடித்திருந்தார். இப்படத்தில் எம்ஜிஆர் யானைகளை வைத்து வித்தை காட்டுபவராக ராஜு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். யானைகள் தங்களை வளர்ப்பவர்களிடம் விசுவாசம், அன்பு வைத்திருப்பதை காட்டும் படமாக நல்ல நேரம் படம் அமைந்திருந்தது.

Also Read : எம்ஜிஆர், சிவாஜியை ஃபாலோ செய்த விஜய், அஜித்.. இரு தலைமுறைக்கும் இருக்கும் ஒற்றுமை

கும்கி : பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமான படம் கும்கி. இந்தப் படம் யானையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில் இரண்டு யானைகள் சண்டை போடும் காட்சி மிகவும் தத்ரூபமாக எடுக்கப்பட்டிருந்தது. முதல் படமே விக்ரம் பிரபுவுக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்தது.

நாய்கள் ஜாக்கிரதை : சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் சிபிராஜ், அருந்ததி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் நாய்கள் ஜாக்கிரதை. இந்த படத்தில் நாய் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது. இப்படத்தின் மூலம் சிபிராஜ்-க்கு ஒரு தரமான ரீ என்ட்ரி தமிழ் சினிமாவில் கிடைத்தது.

Also Read : விக்ரமால் நடிக்க முடியாமல் திணறிய விக்ரம் பிரபு.. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

மியாவ் : சின்னாஸ் பழனிச்சாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் மியாவ். இந்த படத்தில் ஷெல்பி என்ற பூனை தான் ஹீரோ, வில்லன். மேலும் இந்த படத்தில் சண்டை காட்சிகளில் ஹாலிவுட் ஸ்டைலில் பூனை பாய்ந்து பின்னி பெடலெடுக்கும். இந்த படத்தில் ரசிகர்களை வியக்கும்படியான காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது.

மான்ஸ்டர் : நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மான்ஸ்டர். இந்தப் படத்தில் எலி தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது. ஆரம்பத்தில் எலியை கொல்ல தேடி கொண்டிருக்கும் எஸ் ஜே சூர்யா கடைசியாக அதை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை இப்படத்தின் கதை.

Also Read : எஸ் ஜே சூர்யாவை அடையாளப்படுத்திய 2 படங்கள்.. இன்று வரை பேசப்படும் கதாபாத்திரங்கள்

Advertisement Amazon Prime Banner