உதயநிதிக்கு கொட்டிக் கொடுத்த 5 படங்கள் .. விநியோகஸ்தர்களை பம்ம வைக்கும் டான்

5 films given by the distributor to Udayanidhi: விஜய் நடித்த குருவி படத்தில்தான் முதன்முதலாக உதயநிதி, தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தின் மூலம் விநியோகஸ்தராக அவதாரம் எடுத்தார். 15 ஆண்டுகளுக்கு மேலாக இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை விநியோகித்து வரும் உதயநிதிக்கு வசூல் ரீதியாக கொட்டிக் கொடுத்த 5 படங்களை காணலாம்.

துணிவு: தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் விநியோகம் செய்கிறது. இதனால் மற்ற விநியோகஸ்தர்களை கதற விடுகிறார் என்று வரும் தேவையற்ற பேச்சுக்களை கண்டு கொள்வதில்லையாம் உதயநிதி. தன்னிடம் வரும் படங்களை மட்டுமே விநியோகம் செய்யும் உதயநிதிக்கு கடந்த ஆண்டு வெளியான ஹச் வினோத் இயக்கிய அஜித்தின் துணிவு திரைப்படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து கல்லாவை நிரப்பியது.

லவ் டுடே: திரையரங்குகளுக்கும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கும் இடையே நல்லதொரு பாண்டிங் நிலவுவதால் படம் வெற்றியடையும் பொருட்டு இருவருக்குமே அது சரியான லாபமாக அமைந்து விடுகிறது. அந்தகையில் பத்து மடங்கு லாபம் சம்பாதித்து தமிழ் சினிமாவையே அலற விட்டது பிரதீப் ரங்கநாதனின் லவ்டுடே

Also read: புது கூட்டணியில் விக்ரம்.. முதன்முதலாக மாஸ் வில்லனுடன் இணையும் சியான்

டான்: சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில்  சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தில் முதலில் நடிக்க உதயநிதியை தான் அணுகினார்களாம் ஸ்கூல் சப்ஜெக்ட் வருகிறது என்பதால் அந்த கேரக்டர் ஒத்து வராது என மறுத்த உதயநிதி இப்படத்தின் விநியோகஸ்தராக வெற்றியில் பங்கெடுத்தார் என்பது உண்மை. 105 கோடிக்கு மேலாக வசூலில் கெத்து காட்டியது இந்த டான்.

பொன்னியின் செல்வன்: சுபாஷ்கரன் தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் வசூலில் மாபெரும் வெற்றி பெற்றது. இரண்டு பாகத்தையுமே தமிழ்நாட்டில் விநியோகம் செய்யும் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமே ஏற்றது.

விக்ரம்: எப்போதுமே தன்னிடம் வரும் படங்களை மட்டுமே விநியோகம் செய்யும் உதயநிதி, தன்னுடைய சொந்த விருப்பத்தின் பெயரில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலுக்கு கம்பேக் கொடுத்த விக்ரம் திரைப்படத்தை விநியோகம் செய்வதற்கான உரிமையை கமலிடம் கால் செய்து கேட்டாராம். அதன் பின்பே  விக்ரம் படத்தை வினியோகம் செய்து 400 கோடிக்கு மேல் லாபம் பார்த்ததாக தகவல்.

Also read: 2025 வரை பிஸியாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர்.. போட்டி போட்டு சிபாரிசு செய்யும் 2 ஹீரோக்கள்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்