ரீமேக் என்ற பெயரில் படும் மொக்கை வாங்கிய 5 படங்கள்.. சிம்புவால் காணாமல் போன தயாரிப்பாளர்

Actor Simbu: படங்களை ரீமேக் செய்வது என்பது பொதுவான ஒன்றுதான். பெரும் பட்ஜெட்டில், பல எதிர்பார்ப்புடன் உருவாக்கப்படும் படம் வெற்றி கண்டால் அதை ரீமேக் செய்து பிறமொழிகளில் வெளியிடுவது, அன்றைய காலம் தொட்டு சினிமாவில் நடைமுறையில் இருந்து வருகிறது.

அவ்வாறு பிரபலங்களின் படங்களை பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அதிலும் வெற்றி கண்டு வசூல் வேட்டையில் அள்ளிய படங்கள் ஏராளம். அவ்வாறு இல்லாமல் ரீமேக்கில் படும் தோல்வியை சந்தித்த 5 படங்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: புகழ் போதையில் அடாவடியாய் கேரியரை தொலைத்த 5 நடிகர்கள்.. முதலிடம் நம்ம விஜய் தம்பிக்கு தான்

கஜேந்திரா: 2004ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் கஜேந்திரா. இப்படத்தில் விஜயகாந்த், சரத்பாபு, ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். இப்படம் சிம்ஹத்ரி என்னும் தெலுங்கு படத்தை தழுவி எடுக்கப்பட்டது. மேலும் இப்படம் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது. இப்படத்தின் கதை பெரிதளவு தமிழ் ரசிகர்களால் ஈர்க்கப்படாததால் இப்படம் தோல்வியை தழுவியது.

ஆதித்யா வர்மா: 2019ல் புது முயற்சியில் அறிமுக இயக்குனராளும் மேலும் நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் ஹீரோவாகவும், பனிதா சந்து அறிமுக கதாநாயகியாகவும் இணைந்து நடித்திருப்பார்கள். காதலை தழுவிய படமாக எடுக்கப்பட்ட இப்படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு வேற லெவலில் பேசப்பட்டது. இருப்பினும் போதிய விமர்சனங்களை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நம்ம சண்டை செய்யும்போது நம்ம பக்கம் நியாயம் இருக்கணும்.. ஆண்டவர் கொடுத்த அட்வைஸ்

ஆதி: 2006ல் ரமணா இயக்கத்தில், எஸ் ஏ சந்திரசேகர் தயாரிப்பில் வெளிவந்த படம் தான் ஆதி. இப்படத்தில் விஜய், திரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்கள். இப்படம் தெலுங்கு படமான அதனொகடே படத்தின் ரீமேக் ஆகும். இருப்பினும் தமிழில் பெரிதளவு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகன்: 2008ல் ராஜூ சுந்தரத்தின் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஏகன். இப்படத்தில் அஜித்குமார், நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் ஹிந்தியில் ஜான்பாஜ் கமாண்டோ என்னும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. இப்படம் ஆக்சன் படம் என்பதால் அஜித்தின் நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கும். இருப்பினும் இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று தந்தது.

Also Read: அவரைப் பார்த்து கேடுகெட்ட பழக்கத்தை விட்ட வெற்றிமாறன்.. திரும்ப சொல்லிக் கொடுக்கும் லோகேஷ்

ஒஸ்தி: 2011ல் தரணி இயக்கத்தில் சிம்பு, ரிச்சா கங்கோபாத்யாய் ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் ஒஸ்தி. போலீஸ் அதிகாரியாக இடம்பெரும் சிம்புவின் நடிப்பு ரீமிக் படத்தின் சாயலை கொண்டிருக்கும். பெரிதளவு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் இப்படம் படும் தோல்வியை சந்தித்தது. மேலும் இப்படத்தை மேற்கொண்ட ரிலயன்ஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் பெரும் நஷ்டத்தை அடைந்தது. அதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் தரப்பிலும் தாக்கம் அதிகமாக இருந்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்